1000. | ஒற்றி யூர உலவா நின்குணம் பற்றி யாரப் பரவுதல் பொருட்டா என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின் |
5 | ஆவலித் தழுதல் அகன்ற அம்மனை கேவலம் சேய்மையிற் கேளாள் ஆயினும் பிரித்தற் கரிய பெற்றிய தாகிக் குறைவினில் ஆர்க்கும் குழவிய தியல்பின் அறியா தெண்ணில் ஊழிப் பிறவியின் |
10 | மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கு தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம் வாய்தலை அறியா மயக்குறும் வினையேன் மல்கிய இன்பத் தோடுடன் கூடிய எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக் |
15 | கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன் துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி வெள்ளிடை காண விருப்புறு வினையேன் தந்தையுந் தாயுஞ் சாதியும் அறிவும் |
20 | சிந்தையுந் திருவுஞ் செல்கதித் திறனும் துன்பமுந் துறவுந் தூய்மையும் அறனும் இன்பமும் புகழும் இவைபல பிறவும் சுவைஒளி ஊறோசை நாற்றத் தோற்றமும் என்றிவை முதலா விளங்குவ எல்லாம் |
25 | ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து நின்றனன் தமியேன் நின்னடி அல்லது சார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிச் சேர்விட மதனைத் திறப்பட நாடி எய்துதற் கரியோய் யானினிச் |
30 | செய்வதும் அறிவனோ தெரியுங் காலே. |
| 9 |