1001. | காலற் சீறிய கழலோய் போற்றி மூலத் தொகுதி முதல்வ போற்றி ஒற்றி மாநகர் உடையோய் போற்றி முற்றும் ஆகிய முதல்வ போற்றி | 5 | அணைதொறுஞ் சிறக்கும் அமிர்தே போற்றி இணைபிறி தில்லா ஈச போற்றி ஆர்வஞ் செய்பவர்க் கணியோய் போற்றி தீர்வில் இன்சுவைத் தேனே போற்றி வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி | 10 | நஞ்சினை அமிர்தா நயந்தோய் போற்றி |
"என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி - நின்னிடையணுகா நீர்மைய" என்றமையால், 'அருளாளரிடைப் பிறந்த நன்மொழி நின்னிடையணுகும் நீர்மைய' என்பது அருத்தாபத்தியாற் பெறப்பட்டது. ஆவலித்தல் - வாய்விட்டுக் கதறுதல். அம்மனை - தாய். கேவலம் - தனிமை. 'சேய்மைக் கேவலத்தின்' என மொழி மாற்றிக் கொள்க. குறைவினில் - தன் மனக்குறை காரணமாக. ஆர்க்கும் - ஓசை செய்கின்ற, அறியாது - உன்னை அடையும் நெறியை அறியாமல். 'ஊழில்' என ஏழாவது விரிக்க. 'மயங்கி மயக்குறும்' என இயையும். "தலைப்பட" என்பதனையும், 'தலைப்பட்டாற்போல' என்க. 'கண் இலர் கண்பெற்றாற் போலவும். முன்னர்க்கூறிய குழவி தாயைத் தலைப்பட்டாற் போலவும் வணக்கம் வாய்ந்து இன்புறுதலை அறியாமல், மேலும் மேலும் மயக்கத்திலே கிடக்கும் வினையேன் இயற்றிய ஆக' என்க. இன்பம் - ஐம்புல இன்பம். கூடிய - கூடுதற்கு; 'செய்யிய' என்னும் எச்சம். அவாவினில் - ஆசையால். இயற்றிய - இயற்றிவரும் செயல்கள். ஆக - நிகழும் நிலையில் நீயே அவிழ்க்கின் அல்லது' என்க. துன்னிய இருள் - செறிந்த இருள். இருள் - அறியாமை. தூறு - புதர். ஒதுங்கி - மறைந்து. வெள்ளிடை - ஒளி பரந்த இடம். "வினையேன்" என்பதற்குப் பின், "நின்னடி யல்லது சார்வுமற் றின்மையின்" என்பதைக் கூட்டுக. (நீ) 'தளர்ந்தோர் காட்சிச் சேர்விடமாகின்ற அதனை நாடி எய்துதற்கு அரியோய் ஆகலின் தெரியுங்கால் யான் இனிச் செய்வதும் அறிவனோ' என முடிக்க. 1001. குறிப்புரை: முன் பாட்டிற் போந்த, "ஒற்றி யூர" என்பதை இப்பாட்டின் முதலிலும் வருவித்து, 'என்று இங்ஙனம் நவிற்றின் அல்லது, உன்னை ஏத்துதற்குரியோர் இருநிலத்து யார்' என முடிக்க. நவிற்றுதல் - இயன்ற அளவு சொல்லுதல். ஏத்துதல் - புகழ்கள் அனைத்தையும் முற்ற எடுத்துக் கூறுதல். மூலம் - உலகத்திற்கு முதற் காரணம்; சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை. அவை
|