பக்கம் எண் :

739திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன்பொருள் கருத்துறை செம்மைக்(கு)
ஆணி யாகிய அரனே போற்றி
15வெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின்

பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி
மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி

20மேலோய் போற்றி வேதிய போற்றி

சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி

25பொருளே போற்றி போற்றி என்றுனை

நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது
ஏத்துதற் குரியோர் யாரிரு நிலத்தே.

10

திருச்சிற்றம்பலம்


பல்வேறு வகை ஆற்றல்களின் திரட்சியாய் இருத்தலின் அவற்றைத் "தொகுதி" என்றார். முதல்வன், அதனை ஆக்கப்படுத்துபவன். அணைதல் - பற்றுதல். சிறத்தல்-சுவை மிகுதல். வையகம் - நிலம். வனம் - நீர். முன்னுதல் - நினைத்தல். காண விரும்பி நினைக்கப்படுகின்ற பொருள், மெய்ப்பொருள். அது கருத்தில் உற வேண்டுமாயின் கருத்துச் செம்மை பெற வேண்டும்.

செம்மையுள் நிற்பராகில்
சிவகதி விளையு மன்றே1

என அப்பரும் அருளிச் செய்தார். ஆணி - நிலைபெறுத்தும் பொருள். வெம்மையாவது அறத்திற்கு மாறானவரைக் காய்தல். தண்மையாவது அறம் உடையார்க்கு அருளல். 'காய்தலும், அருளலும் ஆகிய மாறுபட்ட இரு தன்மைகளை இறைவன் உடையன்' என்பதை உணர்த்தவே அவன் ஆணும், பெண்ணு மாகிய மாறுபட்ட இரு கூறுகளை ஓர் உடம்பில் கொண்டு விளங்குகின்றான் என்றபடி. மேவுதல் - விரும்புதல். தீபம் - விளக்கு. மாலோன் -


1. திருமுறை - 4.76.2.