பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை740

திருமால். மறையோன் - பிரமன். 'இவர்கள்பால் இவர்களேயாய்க் கலந்து நின்று காத்தல் படைத்தல்களைச் செய்கின்றான்' என்பதாம். மேலோன் - அனைவர்க்கும் மேலானவன். வேதியன் - வேதத்தை அருளிச் செய்தவன். தழலோன் - அக்கினி. இறைவன், இங்கு உருத்திரன். அமரன் - அனைத்துத் தேவரும் ஆயவன். குமரன் - இளையன். சிவனை 'முதியன்' என்றல் உலக வழக்கிலும் காணப்படுவது. பொருள் - அடையத் தக்க பொருள்.

திருவொற்றியூர் ஒருபா ஒருபது முற்றிற்று.