| அகத்தான் திகழ்தரு நாரையூர் அம்மான் பயந்தவெம்மான் உகத்தா னவன்தன் னுடலம் பிளந்த ஒருகொம்பனே. | | 2 |
வெண்பா 1004. | கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய் பின்னவலம் செய்வதென்னோ பேசு. | | 3 |
கட்டளைக் கலித்துறை 1005. | பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியுமென்(று) ஏசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட் |
பொருள் தந்து, முரண் தொடையாயும் நின்றன. முயலுதல், இங்குப் பணிதல், அகத்தான் - மனத்தில் இருப்பவன். திருநாரையூர் பாடல் பெற்ற சிவத்தலம் ஆதல் அறியத் தக்கது. அம்மான் - அப் பெரியோன்; சிவபெருமான். எம்மான் - எங்கள் இறைவன். தானவன், கயமுகாசுரன். 'அவன் உடலம் உகப் பிளந்த ஒரு கொம்பன்' என்க. உக - சிதைந்து சிந்த. யாதொரு படைக்கலத்தாலும் அழியா வரம் பெற்ற கயாமுகாசுரனை விநாயகப் பெருமான் தனது இரு தந்தங்களுள் வலத் தந்தத்தை ஒடித்து அதனாலே கொன்று, ஒற்றைக் கொம்பன் ஆகியதைக் கந்த புராணக் கயமுகன் உற்பத்திப் படலத்துக் காண்க. இதன் முன்னிரண்டு அடிகளில் ஆசிரியர் தம் அனுபவத்தைக் குறிப்பாற் புலப்படுத்தி யிருத்தலை உன்னுக. 1004. குறிப்புரை: இப்பாட்டிற்கு 'நெஞ்சே' என்னும் முன்னிலை வருவித்துக் கொள்க. கொம்பு, பூங்கொம்பு. குறுகாமே - வந்து அடையும் முன். வம்பு அனைய - புதிதாகிய அந்த; இது பண்டறி சுட்டு. தன்னம் - சிறுமை. உலகை வலம் வருதலினும் அன்னை தந்தையரை வலம் வருதல் எளிதாதல் பற்றி "தன்ன வலம்" என்றார். மாங்கனியின் பொருட்டுச் சிவபெருமான் வைத்த ஒட்டத்துள் விநாயகர் முருகனை வென்று மாங்கனியைப் பெற்ற வரலாறு நன்கறியப்பட்டது. என் - என்று சொல். 'சொன்னால், பின் நோய் (வினைகள்) அவலம் (துன்பம்) செய்வது என் உளது? பேசு' என முடிக்க. 1005. குறிப்புரை: "இந்தத் தேசத்தவர் - சிவக்களிறே! நுங்கையும், நுந்தையும், நீயும் - பேசத் தகாது - என ஏசத் தகும்படி பேயும், எருதும், பெருச்சாளியும் என்று இவற்றை ஏறுவதே" என இயைத்து
|