பக்கம் எண் :

743திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை

கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயுமிந்தத்
தேசத் தவர்தொழும் நாரைப் பதியுட் சிவக்களிறே.

4

வெண்பா

1006.களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.

5

கட்டளைக் கலித்துறை

1007.மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் கரன்மகற்கு
முகத்தது கையந்தக் கையது மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே.

6


முடிக்க. நுங்கை - உன் தங்கை. துற்கையை உமை அம்சமாதல் பற்றி 'அவள் தங்கை' என்பதேயன்றி மகளாகவும் கூறுவர். அதை வைத்து இங்கு "நுங்கை" என்றார். கூசத்தகும் தொழில் கொலை. அசுரனை யழித்தல். "பேய்" என்பதிலும் எண்ணும்மை விரிக்க.

1006. குறிப்புரை: "அளறுதொறும்" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. அளறு - சேறு, அஃது ஆகு பெயராய் அவற்றையுடைய வயல்களைக் குறித்தது. 'ஊர் ஆரலை அவ்வூர்தலின் பின்னாகப் பற்றி நாரை ஆரும் (உண்கின்ற) படுகர்' என்க. ஆரல், மீன் வகை. படுகர் - நீர் நிலை. மன் - நிலை பெற்ற. நாரையூரான் - திருநாரையூர்ச் சிவபெருமான். "களிறு முகத்தவனாய்" என்பதை, 'முகம் களிறவனாய்' என மாற்றிக் கொள்க. 'முகம் யானையாகியவன், காயம் (திருமேனி மேகம் போலாது) செந்தீயைப்போல ஒளிறும் (ஒளிவிடுகின்ற) நிறத்தைக் கொண்டிருப்பது என்ன வியப்பு' என்றபடி.

1007. குறிப்புரை: மகம் - வேள்வி. தக்கன் செய்தது. அதில் பல் உதிர்க்கப்பட்டவன் 'பூடா' என்னும் சூரியன். கண் பறிக்கப்பட்டவன் 'பகன்' என்னும் சூரியன். சிரம் அறுக்கப் பட்டவன் எச்சன். (யாக தேவன்) தோள் நெரிக்கப்பட்டவன் இந்திரன். 'நெரித்தருளும் சுரன்' என்க. சுரன் - தேவன். சுகம் - கிளி. "சுகத்தினில்" என்பதை 'சுகத்தொடு' எனத் திரிக்க. பின்னிரண்டடிகள் தும்பிக்கையின் அமைப்பை வியந்து கூறியன.