வெண்பா 1008. | மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும் பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை அருந்தவெண்ணு கின்றவெறும் பன்றே அவரை வருந்தவெண்ணு கின்ற மலம். | | 7 |
கட்டளைக் கலித்துறை 1009. | மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப் புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற் சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே வலஞ்செய்து கொண்ட மதக்களி றேயுன்னை வாழ்த்துவனே. | | 8 |
வெண்பா 1010. | வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத் தனஞ்சாய லைத்தருவா னன்றோ - இனஞ்சாயத் தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும் நாரையூர் நம்பர்மக னாம். | | 9 |
1008. குறிப்புரை: "மருப்பை" என்பது, இசையெச்சத்தால் 'ஒரு காலத்தில் ஒடிக்கப்பட்ட மருப்பை' எனவும், "கொண்டு" என்பது, 'எப்பொழுதும் கொண்டு' எனவும் பொருள் தந்தன. மருப்பு - தந்தம். "பொருப்பு" என்பது 'பொருப்புப் போன்றவன்' எனவும், "எறும்பு" என்பது எறும்பு போல்வது எனவும் பொருள் தருதலால் உவமையாகு பெயர்கள். பொருப்பு, வடிவு பற்றியும், எறும்பு, மடமையாகிய பண்பு பற்றியும் உவமையாயின. "நெருப்பை.... எறும்பன்றே" என்பதை இறுதியிற் கூட்டுக. 'வருத்த' என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. மலம் மூல மலமும், பின் அது பற்றி வரும் கன்ம மாயா மலங்களும், 'அவை வருத்தா' எனவே, வீடு உளதாதல் அமைந்தது. 1009. குறிப்புரை: "மலம் செய்த வல்வினை நோக்கி" என்பதை, "உன்னை வாழ்த்துவன்" என்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. மலம் செய்த - ஆணவத்தால் வருவிக்கப்பட்ட "வல்வினை" என்பது அதன் நீக்கத்தைக் குறித்தது. "நோக்கி" என்றது, 'அது நிமித்தமாகக் கருதி' என்றபடி. புலம் செய்த - எவ்விடத்தும் நின்ற. காட்சி - தோற்றம். சலம் - நீர்; கங்கை. 1010. குறிப்புரை: "இனம் சாய" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. இனம் - அசுரர் சுற்றம். அசுரர், முப்புரத்து
|