பக்கம் எண் :

745திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை

கட்டளைக் கலித்துறை

1011.நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்
தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே
காரண னேயெம் கணபதி யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே.

10

வெண்பா

1012.அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.

11


அசுரர். "நம்பர்" என்பது சிவபெருமானைக் குறித்து இரு முறையாற் கூறப்பட்டது. மகன் - மகவான்; இந்திரன். சிவபெருமான் இந்திரனைத் தோள் நெரித்தமை மேல், "மகத்தினில் வானவர்" என்னும் பாட்டிலும் சொல்லப் பட்டது. 'நாம் நீக்கி அலை தருவானன்றே' என இயைக்க. வனம் - காடு. உருவகம், 'வினையாகிய வனம்' என வருதல் பெரும்பான்மைத்தாயினும் சிறுபான்மை 'வனமாகிய வினை' என வருதலும் உண்டு என்பதைத் தொல்காப்பிய உவம இயலில் கண்டுணர்க. 'வனமாகிய வல்வினை சாய, அதனானே அவற்றால் வரும் நோயை (துன்பத்தை) நீக்கி' என்க. வனசத்தன் - தாமரை மலரில் உள்ளவன்; பிரமன், அவனது அம் - அழகு; அழகிய எழுத்து. இனி, 'அழகாவது அவனது திறல்' எனினும் ஆம். திறலாவது இங்குப் படைக்கும் திறன். இதனையடுத்து நின்ற 'சாய' என்பதில் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது. அலை - அலைத்தலை; அழித்தலை. 'நாம் இனி வினைகாரணமாகப் பிரமனால் படைக்கப்படுதலை ஒழிக்கும் நிலைமை நமக்குத் தருவான்' என்பதாம். "நம்பர்மகன்" இரண்டிலும் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

1011. குறிப்புரை: 'ஏத்த நின்று மன்னு சிவன்' என்க. எல்லை நடாவிய அத்தேர் அணவும் - நாற்பாங்கு எல்லை யளவும் நடத்தப்படுகின்ற தேர் பொருந்திய. காரணன் - எப் பொருட்கும் காரணன். கரி வதனன் - யானைமுகன். என்பவர் - என்று துதிப்பவர். இப்பாட்டின் முதலாகிய "நாரணன்" என்பது முன்பாட்டு இறுதியில் உள்ள "நாரையூர்" என்பதை ஓராற்றால் அந்தாதியாகக் கொண்டதாம்.

1012. குறிப்புரை: "ஈண்டு உழவர்" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ஈண்டு - நெருங்கிய. நெல் அல்களை - நெற்