பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை746

கட்டளைக் கலித்துறை

1013.கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன்
காவில் திகழ்தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே.

12

வெண்பா

1014.யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானேச னாய்த்தனக்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி
எடுத்து மதமுகத்த ஏறு.

13


பயிருக்கு வேண்டத் தகாத களை. 'செங்கழு நீரைக் களையாகக் கட்கும்' என்க. கட்டல் - களைதல். 'அரிய செங்கழுநீர் மலர்களை எளியவாகக் கருதிக் களையோடு சேர்த்து எறிகின்றனர்' என்பது அதன் மிகுதி கூறியவாறு. இதனை 'வீறுகோளணி' அல்லது 'உதாத்த அணி' என்பர். கொங்கு - நறுமணம். தார் - மாலை. அவை கொன்றை மலர் முதலிய வற்றால் ஆயவை. "அவன்" என்பதை, "கோ" என்பதன் பின்னர்க் கூட்டி, 'சேயும், கோவுமாகிய அவன் தன் அடியார்க்கு' என உரைக்க. 'தன் அடியார்க்கு' என்பது இசையெச்சம். தன் உலகம் - கண லோகம். கணம், சிவகணம். 'எல்லையும்' என உருபு விரிக்க.

1013. குறிப்புரை: முதல் அடியில் 'நமன் தமர் வரின் அவர் கூடாவகை யான் விடுவன்' என வேண்டும் சொற்கள் வருவித்து விரித்து, அதனை இறுதியிற் கூட்டுக. கோவில் - கோக்களில்; அரசர்களில். புண்ணியரை அளித்தல் செய்யாது, பாவிகளை ஒறுத்தலை மட்டுமே தொழிலாக உடைமை பற்றி நமனை, 'கோக்களில் கொடியவன்' என்றார். விடுவன் - எதிர் சென்று துரக்குமாறு அனுப்புவேன். 'அனுப்புதல், குறையிரத்தல் வாயிலாக' என்க. 'யான் குறையிரந்தால் அவன் அருளாதோழியான்' என்பதாம். காவின் - காவினால். கா - சோலை. கரு, பனைக் கை, இரு மதம், ஒற்றை மருப்பு, முக்கண் இவை யனைத்தும் யானையைச் சிறப்பித்தன. இரு மதம் - கரிய மதம். ஏ வில் புருவம் - அம்பையுடைய வில்போலும் புருவம். 'கண்கள் அம்பு போலும்' என்பது குறிப்பு. கண் இமையாதவனை "இமையவள்" என்றது எதிர்மறை இலக்கணையாய், 'தேவி' என்னும் கருத்துடையதாயிற்று. தேவி உமா தேவி. தான், அசை.

1014. குறிப்புரை: 'யான் ஏந்திய வெண்பாக்கள் (யான் ஏத்திய அல்ல; மற்று.) நாரையூர் விநாயகப் பெருமான் தானே தனக்கு நல்கிக்