கட்டளைக் கலித்துறை 1015. | ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்மிருந்தேன் நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னிணை நண்ணலரைச் சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர் வேறியல் பால்தொழும் நாரைப் பதியுள் விநாயகனே. | | 14 |
கொண்டவை' என்க. "வெண்பா" என்பது, இங்கு, 'வெளிற்றுப் பொருள்களையுடைய பாக்கள்' எனப் பொருள் தந்தது. 'இவைகளைத் தாமும் அவனது அருள் இன்றி, யானே இயற்றுதல் இயலாது' என்றபடி. என்னை நினைந்து அருள் காரணமாக என்னையும் ஒருவனாகத் திருவுளத்து அடைத்து. 'தலைவனாகிய அவன் அடிமை நேசனாகிய யானாகவேயிருந்து நல்கிக் கொண்டான்' என்க. இதனால் இப் பிரபந்தம் சீவபோதத்தின் வழிப் போந்ததாகாது. சிவபோதத்தின் வழிப் போந்ததாதல்விளங்கும் "சூலம் வலனேந்தி" என்றது, 'சிவபெருமான்' என்றபடி. "ஏந்தி" என்பது பெயர். எடுத்த - ஈன்றெடுத்த. மதம் - கன்ன மதம். 'அது முகத்தின் வழியாகப் பாய்கின்றது' என்றபடி. ஏறு - சிங்க ஏறு. உவம ஆகுபெயர். இது நடையாகிய தொழில் பற்றி வந்த உவமம். "ஏறுபோற் பீடு நடை"1 என்றார் திருவள்ளுவரும். "நல்கினான்" என உயர் திணையால் முடித்தமையின் "ஏறு" என்பது உபசாரமும், உருவகமும் ஆகாமை உணர்க. இங்கும் "சூலம்வலன்" என்பதில் மகர ஒற்று அலகுபெறாதாயிற்று. 1015. குறிப்புரை: வீரணக் குடி ஏந்திழை - வீரர்களால் வெற்றி வேண்டி வழிபடப்படும் கொற்றவை; துற்கை. இவளை மேல்2 "நுங்கை" என்றதுபோல இங்கு 'அவளுக்கு முன்' (முன்னோன் - தமையன்) என்றார். முன்னினை - தமையனை; இன், சாரியை. நண்ணலர் - பகைவர். இங்குத் தக்கனும், அவன் சார்பாக அவனது வேள்வியை ஏற்றவரும் வெம்பணை -போர் முரசு. 'அதனையுடைய சிங்கம்' என்றது வீரபத்திரரை. அவர் உமை மலையரையன் மகளாதற்கு முன்னர்த் தோன்றினமை யால் விநாயகரை 'அவருக்கு இளையோன்' என்றார். "விநாயகன்" என்பதிலும் தொகுக்கப்பட்ட இரண்டனுருபை விரித்து அதனை, "இளையானை" என்பதன் பின்னர்க் கூட்டுக. விண் - தேவலோகம். 'அது வேறு ஓர் இயல்பால் தொழும்' என்க. வேறு - தனி - தனி ஓர் இயல்பால் தொழுதலாவது, விரும்பிய செயலை இடையூறின்றி இனிது முற்றுவிக்க வேண்டித் தொழுதல். 'முன்னவனும், இளையானும் ஆகிய நாரைப் பதியுள் விநாயகனை விண் வேறு இயல்பால் தொழும்' - என வினை முடிக்க.
1. திருக்குறள் - 55. 2. இந்நூல் - 4
|