பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை748

வெண்பா

1016.கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரங்கன் றென்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.

15

கட்டளைக் கலித்துறை

1017.வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென் றுரைப்பரிவ் வையகத்தே.

16

வெண்பா

1018.வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்

1016. குறிப்புரை: கனம் - மேகம் - 'கனம் மதிலின்கண் சூழ் நாரையூர்' என்க. கசிந்தார் - அன்பால் மனம் உருகினவர். அவர்தம் மனம் மருவினான் சிவபெருமான். 'பயந்த கன்று' என இயையும். வாய்ந்த - அவனுக்குப் பொருந்திய ஆரம்' என்க. சினம் மருவியதும், தீண்டுதற்கும் பிறர் கூசுவதும் ஆகிய ஆரம்; அது பாம்பாகிய மாலை; 'குஞ்சர முகக் கன்று' என மாறுக. முகம் யானையாயினமை பற்றிப் பிள்ளையாரையே 'யானை' என்றலும் ஆம் என்றற்கு, 'பிள்ளை' என்னாது, "கன்று" என்றார். என்றார்க்கு - என்று சொல்லித் துதித்தவர்க்கு. 'வான் மா சாரமோ? சொல்லு' என்க. வான் - சுவர்க்க லோகம். மா சாரம் - பெரிய பயன். "சொல்லு" என்றது நெஞ்சை நோக்கி. எனவே, 'நீயும் அவ்வாறு சொல்' என்பது குறிப்பெச்சமாயிற்று.

1017. குறிப்புரை: "தேனின் பிறந்த" என்பதில் இன்னுருபை ஒரு உருபாகத் திரித்துக் கொள்க. மலர், அவை மலரும் பொய்கையைக் குறித்தலால் தானியாகுபெயர். கோனின் - கோனால். குலம் - சிறப்பு. "மலையின் மான்" என்பது இலக்கணை (சார்பு) வழக்கால் 'மலையரையன் மகள்' எனப் பொருள்படுவதை 'மலையில் வாழ்கின்ற மான்' எனப் பொருள்படுகின்ற இயல்பு வழக்காகக் காட்டி, அதிசயம் தோற்றுவித்தவாறு.

1018. குறிப்புரை: "நம் சிந்தை அமர்வான்" என்பதை முதலில் வைத்து உரைக்க. கை ஐந்து ஆகலின் ஐந்திலும் ஐந்து பொருள்கள்