| மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான் ஆங்கனிநம் சிந்தையமர் வான். | | 17 |
கட்டளைக் கலித்துறை 1019. | அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதியமர்ந்த குமரா குமரற்கு முன்னவ னேகொடித் தேரவுணர் தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேயெனநின்(று) அமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே. | | 18 |
வெண்பா 1020. | அவமதியா துள்ளமே அல்லலற நல்ல தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம் கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர் நம்பன் சிறுவன்சீர் நாம். | | 19 |
இருத்தல் கூறப்பட்டது. மாங்கனி இடப்புறக் கீழ்க்கை. கொம்பு - தந்தம்; வலப்புறக் கீழ்க்கை. அண்டம் - ஆகாயம்; தும்பிக்கை; 'ஆகாயத்தைத் தடவுகின்றது' என்றபடி. பாசம் இடப்புற மேற் கை. "மழு" என்பது 'படைக்கலம்' எனப் பொருள் தந்து, அங்குசத்தைக் குறித்தது. வலப்புற மேற்கை. மல்குதல் - நிறைதல். "மல்குவித்தான்" என்பது வினைப் பெயர். ஆம் அசை, கனி சிந்தை வினைத்தொகை. அமர்வான் - விரும்புவான். "நம் சிந்தை அமர்வான்" என்பது, 'புலி கொல் யானை' என்பதுபோலத் தடுமாறு தொழிற்பெயர். 1019. குறிப்புரை: அமரா - தேவனே. குமரன் - பிள்ளை. சரண் - பாதம். குமரற்கு முன்னவன் - முருகனுக்குத் தமையன். தமர் - சுற்றத்தார். ஆசு - குற்றம்; அவுணர் தமராகிய ஆசு' என்க. அவுணர், இங்கு முப்புரத்து அசுரர். "என நின்று அமரர் மனத்தவர்" என்பதை 'என அமர்ந்து நில்லாதவர்' என மாற்றிக் கொள்க. அமர்தல் - விரும்புதல். 'என' என் எச்சத்தால், 'துதித்து நில்லாதவர்' எனக் கொள்க. 1020. குறிப்புரை: "உள்ளமே" என்பதை முதலிற் கூட்டுக. தவ மதி - தவத்தால் உண்டாகிய ஞானம். தவமானவன, சரியை கிரியா யோகங்கள். சதுர்த்தோம் - பெருமை பெற்றோம். நவ மதியாம் கொம்பு - புதிதாகத் தோன்றுகின்ற பிறைபோலும் தந்தம். நம்பன் - சிவபெருமான். சிறுவன் - மகன் "அவமதி யாது" என்பது, முன்பாட்டில், "மனத்தவர்" என்ற அந்தத்தை ஆதியாகக் கொண்டதாம்.
|