பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை750

கட்டளைக் கலித்துறை

1021.நாந்தன மாமனம் ஏத்துகண் டாயென்றும் நாண்மலரால்
தாந்தன மாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேயைந்து செங்கைய னேநின் திரள்மருப்பை
ஏந்தின னேயென்னை ஆண்டவ னேயெனக் கென்னையனே.

திருச்சிற்றம்பலம்


1021. குறிப்புரை: மனம் - மனமே. இதனை முதலிற் கொள்க. 'நம் தனம்' என்பது "நாம் தனம்" என நீட்டல் பெற்றது. தாம் தனம் - தாவும் (இவ்வுலகத்தைக் கடந்து பற்றும்) செல்வம். 'இருந்தனே' என இதுவும் விளி. எனக்கு என் - 'எனக்கு' என்று இருக்கின்ற. ஐயன் - தலைவன். 'மனமே! தாம் தனமாக இருத்தனனே!.... என் ஐயனே! என்று நாள் மலரால், நம் தனமாக ஏத்து' என வினை முடிக்க. கண்டாய், முன்னிலையசை.

திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை முற்றிற்று.