நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்த 32. கோயில் திருப்பண்ணியர் விருத்தம் கட்டளைக் கலித்துறை திருச்சிற்றம்பலம் 1022. | நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து, நீள்மலர்க் கண்பனிப்ப வஞ்சம் கடிந்துன்னை வந்திக்கி லேன்அன்று வானருய்ய நஞ்சங் கருந்து பெருந்தகை யே;நல்ல தில்லைநின்ற அஞ்செம் பவளவண் ணா!வருட் கியானினி யாரென்பனே. | | 1 |
1023. | என்பும், தழுவிய ஊனும், நெகஅக மேயெழுந்த அன்பின் வழிவந்த வாரமிர் தே!யடி யேனுரைத்த |
1022. கோயில் - தில்லைத் தலம். பண்ணியர் - கூத்தாடுபவர். இங்கு 'விருத்தம்' எனப்பட்டது கட்டளைக் கலித்துறையே. முதற்காலத்தில் இவ்வாறு வழங்கப்பட்டது. இதுவும் ஓர் அந்தாதியே. குறிப்புரை: "நஞ்சு அங்கு அருந்து" என்பதில் அங்கு, அசை. "அன்று வானர் உய்ய... பவள வண்ணா" - என்பதை முதலிற் கொள்க. மலர்க் கண் - மலர்போலும் கண்கள். பனிப்ப - நீரைத் துளிக்க. "உன்னை வந்திக்கிலேன்; இனி (உன்) அருட்கு 'யார்' என்பன்" என வினை முடிக்க. அருட்கு - அருளைப் பெறுதற்கு. யார் - என்ன உரிமையுடையேன். "யார்" என்னும் வினாவினைக் குறிப்பு உயர்திணை முப்பாற்கும் உரித்தாகலானும், 'தன்மைச் சொல் உயர்திணையது' என்றல் பழைய வழக்கு ஆதலாலும் அது "நான் ஆர்"1 என்றாற் போல வருதல் இலக்கணமேயாதலின் இங்கு "யான் யார்" என வந்தது. "என் உள்ளம் ஆர்"2 என்பது உயர்திணையாயினாராது உள்ளமேயாதலின் அது, "எம் கோதைகூட்டுண்ணிய தான் யார்மன்" - என்பதிற் திணைவழுவமைதியாம் - 'என்பர்' என்பது பாடமன்று. 1023. குறிப்புரை: "வளர் தில்லைதன்னுள்.... விண்ணவனே" என்பதை, "ஆனமிர்தே" என்பதன் பின்னர்க் கூட்டுக. என்பும், 'அதனைத் தழுவிய ஊனும்' என்க. நெக - நெகிழ்ந்து உருகும்படி. இறைவனை "அமிர்து" என்றதற்கு ஏற்ப, அன்பை, 'கடல்' என
1. திருவாசகம் - திருக்கோத்தும்பி - 2. 2. தொல்காப்பியச் சேனாவரையம் - சூ. 210 மேற்கோள்.
|