| வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்;வளர் தில்லைதன்னுள் மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே. | | 2 |
1024. | அவநெறிக் கேவிழப் புக்கவிந் தியானழுந் தாமைவாங்கித் தவநெறிக் கேயிட்ட தத்துவ னே!அத் தவப்பயனாம் சிவநெறிக் கேயென்னை உய்ப்பவ னே!சென னந்தொறுஞ்செய் பவமறுத் தாள்வதற் கோ,தில்லை நட்டம் பயில்கின்றதே. | | 3 |
1025. | பயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம்; பனிமலர்த்தார் முயல்கின் றிலேன்நின் திருவடிக் கேயப்ப; முன்னுதில்லை இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துளெந் தாய்!இங்ஙனே அயர்கின்ற நானெங்ங னேபெறு மாறுநின் னாரருளே. | | 4 |
உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம். "அன்பினில் விளைந்த ஆரமுதே"1 என்பது காண்க. வன்மை - செவி பொறுக்க ஒண்ணாமை. புன்மை - பொருட் சிறப்பு இன்மை. கொல், அசை. ஆம், உரையசை. 'போதும்' என்றபடி. "அகமே எழுந்த அன்பின் வழி வந்த ஆரமிர்தே" என்றமையால் 'அன்பர் சொல்லை ஏற்கின்ற நீ அன்பில்லாத என் சொல்லையும் கருணையினால் ஏற்பாய் போலும்' என்பது குறிப்பாயிற்று. 1024. குறிப்புரை: நெறிக்கே - நெறிக்கண்ணே; உருபு மயக்கம். புக்கு - சென்று. அவிந்து - (வீணே) இறந்து. அழுந்தாமை - பின்பு நகரத்தில் அழுந்தாதபடி. வாங்கி - மீட்டு, தவநெறி - பசு புண்ணிய வழி. பசு புண்ணியங்கட்கு இடையே நிகழும் அபுத்தி பூர்வ சிவ புண்ணியங்களே புத்தி பூர்வ சிவ புண்ணியமாகிய சிவ நெறியிற் சேர்க்குமாயினும் சிவநெறியை அத்தகைய அவ்வபுத்தி பூர்வ புண்ணியங்கட்குத் துணையாகும் பசு புண்ணியங்களின் பயனாகவே கூறினார். தத்துவன் - மெய்ப்பொருளாய் உள்ளவன். 'நீ நடம் பயில்கின்றது (உயிர்களை அவை) செய் பவம் அறுத்து ஆள்வதற்கோ' என்க. பவம் - பாவம். ஓகாரம் சிறப்பு. எனவே, 'பவம் அறுத்து ஆள்வதற்கே' என்பதாம். 'தில்லைப் பெருமான் திருநடம் புரிதல் உயிர்களுக்கு வீடுபேற்றைத் தருதற் பொருட்டே' என்பதாம். இதனானே, தில்லை, காண முத்தி தரும் தலம்' எனப்படுகின்றது. 1025. குறிப்புரை: அப்புதல், இங்குச் சாத்துதலைக் குறித்தது. 'பனி மலர்த்தால் அப்ப முயல்கின்றிலேன்' என்க. அயர்தல் - இளைத்தல். எந்தாய் - என் தந்தையே.
1. திருவாசகம் - பிடித்த பத்து - 3.
|