பக்கம் எண் :

755கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

ஏயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழலெவர்க்குந்
தாயவன் தன்பொற் கழலென் தலைமறை நன்னிழலே. 

9

1031.நிழல்படு பூண்நெடு மாலயன் காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னக லேந்தித் தமருகம் தாடித்தமைத்(து)
எழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை யம்பலத்தே
குழல்படு சொல்வழி யாடுவர், யாவர்க்குங் கூத்தினையே.

10

1032.

கூத்தனென் றுந்தில்லை வாணனென் றுங்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை யாதே, யிடுதுணங்கை,
மூத்தவன் பெண்டிர் குணலையிட் டாலும், முகில்நிறத்த
சாத்தனென் றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே.

11


வெயிலாயிற்று. எனவே, 'வெயிலைத் தடுத்துத் தலையைக் காக்கின்ற நிழல்போல, வினையைத் தடுத்துக் காக்கும் காப்பு' என்பதாம்.

1031. குறிப்புரை: நிழல் - ஒளி. பூண் - அணிகலன்; இங்குச் சிறப்பாகக் கௌத்துவ மணியைக் குறித்தது. 'நீண்டவரே யாவர்க்கும் கூத்தினை ஆடுவர்' என இயைத்து முடிக்க. "யாவர்க்கும்" எனச் சிறப்புடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினாராயினும், 'எவ்வுயிர்க்கும்' என்றலே கருத்து. 'யாவர்க்கும் ஆக' என ஆக்கம் வருவிக்க. ஆதல் - நன்மை பயத்தல். 'தழலை அகலில் ஏந்தி என்க. படு - பொருந்திய. பொன் - அழகு. தமருகம் - உடுக்கை. 'தாடனம்' என்னும் வடசொல், 'தாடித்தல்' எனத் திரிக்கப்பட்டது. தாடனம் - அடித்தல். 'கரத்தை எழில்பட வீசி' என மாறுக. தில்லை - தில்லை நகர். நிறத்தொடு பட்ட இசையை, "சொல்" என்றார். நிறத்தை, 'வர்ணம்' என்பர். "நீண்டவரே" என்னும் பிரிநிலை ஏகாரத்தால், 'பிறர் அது செய்கின்றிலர்' என்பது போந்தது.

1032. குறிப்புரை: இப்பாட்டுத் தில்லைப் பெருமானைக் காதலித்தாள் ஒருத்தியது வேறுபாடு கண்டு, 'இது தெய்வத்தான் ஆயது' எனக் கருதி எடுக்கப்பட்ட வெறியாட்டினைத் தோழி விலக்கி, அறத்தொடு நின்றது. 'குழுமியிட்டு' என்பது இடைக் குறைந்து நின்றது. ஏத்தன் - துதிகளை உடையவன். செவிமாட்டு இசைத்தல் - செவியிற் செல்லும்படி கூறுதல். 'அதனைச் செய்யாமல் பலவகை ஆடல்களை ஆடினால் பயன் தருமோ' என்றாள். துணங்கை, குணலை சில கூத்தின் வகைகள். பின்னர் 'சாத்தன்' என வருதலால், "மூத்தவன்" என்றது. அவனுக்கு முன்னோனாகிய முருகனை. குறிஞ்சிக் கிழவனாய உரிமை பற்றிக் குறிஞ்சி நிலப் பெண்களை. முருகன் பெண்டிராகக் கூறினார். 'பெண்டீர்' என்பது பாடமாயின் அதனை முதற்கண் கூட்டியுரைக்க. சாத்தன் - ஐயனார். குறிஞ்சி