1033. | தண்ணார் புனல்தில்லைச் சிற்றம் பலந்தன்னின் மன்னிநின்ற விண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் னுடல்முழுதும் கண்ணாங் கிலோ!தொழக் கையாங் கிலோ!திரு நாமங்கள்கற்(று) எண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோ!வெனக் கிப்பிறப்பே. | | 12 |
1034. | பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம், பேரொலிநீர் நறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடக மாடுகின்ற துறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர் உறவியல் வாற்கண்கள் கண்டுகண் டின்பத்தை உண்டிடவே. | | 13 |
நிலப் பெண்களை முருகன் பற்றுவதாகக் கூறுதலே மரபாயினும், 'சிறுபான்மை ஐயனார் பற்றுவதாகக் கூறுதலும் உண்டு' என்பது இதனால் அறிகின்றோம். தண்ணென வருமோ - குளிர்ச்சி உண்டாகுமோ; உண்டாகாது; வெம்மையே உண்டாகும் என்பதாம். 1033. குறிப்புரை: இறுதிக்கண் தொக்க ஏழாவதனை, 'எனக்கு இப்பிறப்பின்கண்' என விரித்து, "கண்ட நாள்" என்பதன் பின்னர்க் கூட்டுக. இவ்வாறன்றி இன்மையை உடைமையின் மறுதலையாக்கி, இயல்பாகவே கொள்ள அம் ஆம், கண்ணிற்குக் கூறிய "உடல் முழுதும்" என்பதனை ஏனைக் கை, வாய் இவற்றிற்கும் இயைக்க. கைக்கும், வாய்க்கும் முறையே "தொழ" எனவும், "எண் ஆம் பரிசு" எனவும் கூறினாற்போலக் கண்ணிற்கும், 'காண' என்பது வருவிக்க. "விருப்பாய்" என்னும் எச்சம், 'காண, தொழ, எண் ஆம் பரிசு' என்பவற்றோடு முடிந்தது. "ஆங்கு" மூன்றும் அசை நிலைகள். ஓகாரங்கள் இரக்கப் பொருள். எண் - எண்ணல்; உருவேற்றுதல். முதனிலைத் தொழிற்பெயர். "அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்"1 என்று அருளிச் செய்தது காண்க. பரிசு - வகை. 1034. குறிப்புரை: "பிறவியில் .... கண்டிலம்" - என்பதை இறுதிக்கண் கூட்டுக. ஒன்று - வேறொன்று. 'ஒன்றும்' என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது. நறவு - தேன். துறவு இயல் - துறவு வேடம். அவை சடை முடியும் கல்லாடையும். உறவு இயல்வால் - கூட்டுறவு நிகழ்தலால். 'தொண்டர் உறவே கூத்தனைக் காண வாய்ப்பளித்தது' என்றபடி. 'உண்டபின்' என்பது "உண்டிட" எனத்
1. திருமுறை - 3.49.3.
|