பக்கம் எண் :

757கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

1035.உண்டேன் அவரரு ளாரமிர் தத்தினை வுண்டலுமே
கண்டேன் எடுத்த கழலுங் கனலுங் கவித்தகையும்;
ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கு மொளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை யம்பலத் தாடும் மணியினையே.

14

1036.மணியொப் பன,திரு மால்மகு டத்து; மலர்க்கமலத்(து)
அணியொப் பன,வவன் தன்முடி மேலடி யேனிடர்க்குத்
துணியச் சமைத்தநல் ஈர்வா ளனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை யம்பலத் தான்தன் திருந்தடியே.

15


திரிந்து நின்றது. 'உண்டபின்' என்பதும், 'உண்ணுதலைப் பெற்றபின்' என்றதேயாம். "கண்டிலம்" என்றது 'கருதிற்றிலம்' என்றபடி.

1035. குறிப்புரை: அருளாகிய அமிர்தத்தை உண்டதாவது, அருள் கைவரப் பெற்றமை. 'அருள் உண்டாய வழியே அம்பலத்து ஆடும் மணியினைக் காண்டல் கூடும். அஃது இல்லையாயின் அது கூடாது' என்றபடி. செய்யுட்கண் முதற்கண் வந்த "அவர்"என்னும் சுட்டுப் பெயர் ஒருமைப் பன்மை மயக்கமாய்ப் பின் 'மணி' எனப்பட்டவனையே சுட்டிற்று. எடுத்த கழல் - தூக்கிய திருவடி. "கனல்" என்றே போயினாராயினும், ஏனையவற்றோடு இயைய, 'கனற் கையும்' என உரைக்க. கவித்த கை, தூக்கிய திருவடியின்மேல் உள்ள கை. தேன்மொழி - தேன்மொழியாள்; சிவகாம சுந்தரி.

முதற்சினைக் கிளவிக்கு அதுஎன் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கு ஐயாகும்1

என்பது இலக்கணமாயினும், 'அவனைக் கையைப் பிடித்தான்' என்றவழி, 'கையைப் பிடித்தான்' என்னும் தொடர் மொழி, 'தீண்டினான்' எனப் பொருள் தந்து ஒரு சொல் தன்மைப் படுதலின் இவை போல்வனவற்றில் இரண்டிடத்து ஐயுருபு வருதல் சிறுபான்மை வழக்காய் அமைதல் பற்றி, இங்கு 'மணியினைக் கழலையும், கையையும், நோக்கையும், நகையையும் கண்டேன்' என்றார். இரண்டன் உருபுகள் இறுதிக்கண் தொக்கன. இனி இவ்வாறன்றி, "மணியினை" என்றது உருபு மயக்கம் எனினுமாம்.

1036. குறிப்புரை: "சூழ் பொழில்கள் என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. 'அம்பலத்தான்றன் அடி திருமாலது முடியின்மேல் அதன் மணியும், அதில் அணியப்பட்ட கமல மலரும் ஒப்பன' என ஒரு தொடராகத் தொகுத்தோதற் பாலதனை இருதொடராக வகுத்தோதினார், இரண்டனையும் நன்கு வலியுறுத்தற்கு. துணிய - துண்டுபட்டு விழும்படி என்றது,


1. தொல் - சொல் - வேற்றுமை மயங்கியல்.