1037. | அடியிட்ட கண்ணினுக் கோ?அவ னன்பினுக் கோ?அவுணர் செடியிட்ட வான்துயர் சேர்வதற் கோ?தில்லை யம்பலத்து முடியிட்ட கொன்றைநன் முக்கட் பிரான்அன்று மூவுலகும் அடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே. | | 16 |
1038. | படைபடு கண்ணிதன் பங்க!தென் தில்லைப் பரம்பர!வல் விடைபடு கேதுக! விண்ணப்பங் கேளென் விதிவசத்தால் கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய், புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதமென் னுள்புகவே. | | 17 |
'விழுந்ததுபோலக் கெடும்படி' என்றவாறு. ஈர் வாள் - அறுக்கின்ற வாள். "துணிய" எனவும், "ஈர் வாள்" எனவும் போந்தவற்றிற்கு ஏற்ப, 'வலிய பெருமரம் ஒத்த இடர்' என வருவித்துரைக்க. இங்கு, பல பொருள் உவமை வந்தது. "இடர்" என்பது காரியவாகுபெயராய், அவற்றை விளைக்கும் வினைகளைக் குறித்தது. "இருவினை மாமரம்"1 எனத் திருவாசகத்தும் கூறப்பட்டது. 1037. குறிப்புரை: அடி இட்ட - திருவடியில் சாத்திய. செடி இட்டி - கீழ்மை பொருந்திய. வான் துயர் - மிக்க துன்பம். கண்ணன் - திருமால். 'திருமால் சிவபிரானை நாள்தோறும் ஆயிரந்தாமரை மலரால் அருச்சித்து வழிபட்டிருக்கும் நாள்களில் ஒருநாள் சிவபிரான் ஒரு மலரை மறைத்துவிட, அதற்கு ஈடாகத் திருமால் தனது கண் ஒன்றைப் பறித்துப் பெருமான் திருவடியில் சாத்திடப் பெருமான் மகிழ்ந்து தன்னிடம் இருந்த வலிய சக்கரப் படையை அளித்தருள, திருமால் அதைக் கொண்டு அசுரர்களை அழித்து உலகிற்கு நன்மை தந்து வருகின்றான்' என்பது புராண வரலாறு. 'அறத்திற்கோ, புகழுக்கோ பொருள் கொடுக்கின்றீர்' என வினவினால், 'இரண்டிற்குந்தான்' என்பது பொதுவிடை யாயினும் சிலர், அவற்றுள் ஒன்றையே சிறப்பாகக் கருதுவர்; அது போலவே, இங்கு, 'கண்ணினுக்கோ, அன்பினுக்கோ, அவுணர் துயர் சேர்வதற்கோ அரும்படை ஈந்தது' என எழுப்பப்பட்ட வினாவிற்கு, 'மூன்றிற்குந்தான்' என்பது பொது விடையாயினும், 'அன்பிற்கு' என்பதே இங்குச் சிறப்பாகக் கருதப்பட்டது. 1038. குறிப்புரை: படை, இங்கு வாள். படு, உவம உருபு. வல்விடை - விரைந்து செல்லும் இடபம். கேதுகன் - விருது கொடியை உடையவன். தரைதனில் கீழை விட்டுத் தவம்செய் சாதியினில் வந்து2 எனச் சாத்திரம் கூறுதலின்,
1. திருஅண்டப் பகுதி - அடி. 87. 2. சிவஞான சித்தி - சூ.2.90.
|