பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை76

138.

அவளோர் குலமங்கை பாகத்(து) அகலாள்
இவளோர் சலமகளும் ஈதே; -தவளநீ(று)
என்பணிவீர் என்றும் பிரிந்தறியீர்; ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமினிங்(கு) ஆர். 

95



‘சிவபெருமான் திரிபுரம் எரித்த காலத்தில் திருமால் அவருக்கு இடபவாகனமாய் இருந்தார்’ என்பது புராண வரலாறு.

தடமதில்கள் அவைமூன்றும் தழல்செய்த நாளின்கண்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.1

என்னும் திருவாசகத்தைக் காண்க. பொருப்பன் - மலைய ரையன். அவன் மகள் உமாதேவி. அவளை நீ வேறு வையாது உன் உடம்பில் ஒரு பாதியாக வைத்திருப்பதற்குக் காரணம் யாது? அவள்மீது நீ வைத்துள்ள பெருவிருப்பத்தால் அவளை விட்டு நீ வேறாய் இருக்க ஆற்றாயோ? அவளுக்கு இருக்க வேறு இடம் இல்லையோ? உன்னை விட்டுப் பிரிந்து அவள் தனியேயிருக்க அஞ்சுகின்றாளோ? என் - யாது காரணம்? - என்க. “என்னோ” என்னும் ஓகாரம் அசை. இவையெல்லாம் காரணங்க ளல்ல; இருவரும் இருவரல்லர்; ஒருவரே’ என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. ‘பொருப்பன்மகள்’ என்னும் சீரை, னகர ஒற்றுத் தள்ளி அலகிடுக.

138. அ. சொ. பொ.: ‘உம்முடைய ஒரு பாகத்தினின்றும் நீங்காதிருப்பவளாகிய அவள் (நீ முறைப்படி மணந்து கொண்ட) குலமங்கை’ என்பது நன்கு விளங்குகின்றது. (அவள் நிற்க) இவள் ஒருத்தியும் நீர்வடிவாய் (உமது தலையில் இருக்கின்றாள்) இவளையும் நீர் என்றும் பிரிந்தறியீர்; உம்முடைய தன்மை இதுவேயாய் உள்ளது. (இருக்கட்டும்) இவ்விருவருள் அன்பு மிகுதியால் நெருங்கிய உறவுடையவர் யார்? சொல்லுமின்’ - என்க. “தவள நீறு, என்பு அணிவீர்” என்பதை முதலிற் கொள்க. “சலமகளும்” என்பதன்பின் ‘உள்ளாள’ என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ஈதே - இவ்வாறானதே. இதற்கு, ‘உமது தன்மை’ என்னும் எழுவாய் வருவிக்க. ‘அன்பால்’ என உருபு விரிக்க. ‘அன்பால் அணியார் இங்கு ஆர்; சொல்லுமின்’ - என்றது, அணியாளாய் ‘பொருப்பன் மகள்தான் அன்பால் இருக்க முடியும்’ சலமகள் எங்ஙனம் அன்பாய் இ்ருக்க முடியும் எனக் குறித்தவாறு, “சலம்” என்பதற்கு, - ‘வஞ்சம்’ - என்பதும் பொருளாகலின், அதனாலும் ஒரு சொல்நயம் தோற்றுவித்தவாறு. ‘பொருப்பன் மகளே உமது அங்கமும், பிரத்தியங்கமும் ஆவள்; ஏனைய வெல்லாம் உமது சாங்க உபாங்கங்களாம்’ என்றபடி. பொருப்பன் மகளே சிவனது சக்தி; அவளது சம்பந்தத்தாலே சிவனது


1. திருச்சாழல் - 15.