1045. | சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச்சிற் றம்பலத்துப் பிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்ற மிறைப்புள வாகிவெண் ணீறணிந்(து) ஓடேந்தும் வித்தகர்தம் உறைப்புள வோ,வயன் மாலினொ(டு) உம்பர்தம் நாயகற்கே. | | 24 |
1046. | அகழ்சூழ் மதில்தில்லை யம்பலக் கூத்த! அடியமிட்ட முகிழ்சூ ழிலையும் முகைகளு மேயுங்கொல்! கற்பகத்தின் திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப் புகழ்சூ ழிமையவர் போற்றித் தொழும்நின் பூங்கழற்கே. | | 25 |
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி | என்மனத்தே | வ ழுவா திருக்க வரந்தர வேண்டும்1 |
என்பதும் இக்கருத்தே பற்றி எழுந்தது. இன்பமாவது திருவருளோடு கூடியிருத்தலும், துன்பமாவது அதனொடு கூடாதிருத்தலுமே' என்னும் உண்மை இவ்வாறு எங்கும் விளக்கப்படுகின்றது. துறவி - உலகப் பற்றை விட்டவன். 1045. குறிப்புரை: சிறைப் புள் - சிறகையுடைய பறவை. அவாம் - விரும்புகின்ற. 'பிறையாகிய பிளவு' என்க. பிதற்றுதல் - அன்பால் பலகாலும் சொல்லுதல். மிறைப்பு - மன உறுதி. உறைப்பு - வலிமை; யாதொன்றிற்கும் அஞ்சாமையும், எதனையும் வெல்லுதலும். அயன், மால், இந்திரனாகியோர் ஒவ்வொருவரையும் நோக்க வலிமை பலவாதலின், "உளவோ" என்றார். ஓடேந்துதலைக் கூறியது, வறுமையை உணர்த்த. 1046. குறிப்புரை: முகிழ் - அரும்பு. 'அவை சூழ் இலை' என்றது, 'இடையே அரும்புகளையுடைய இலைக் கொத்து' என்றபடி. ஏயும் - பொருந்தும். கொல், ஐயம். 'தேவர் தூவும் கற்பக மலர் மழையையன்றி, யாம் இடும் நிலவுலக இலையையும், அரும்பையும் விரும்புவையோ' என வினாவிய படி. 'யாம் இடும் இலையையும், அரும்பையுமே நீ விரும்புவாய்' என்பது இதன் உட்கருத்து. ஏன் எனில், 'யாம் அன்பே காரணமாக இடுகின்றோம்; இமையவரோ தாம் தம் நிலையில் நிலைத்து வாழ்தல் வேண்டியிடுகின்றனர்' என்பதாம். வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்2 என்று அருளியது காண்க. இங்கு, "திறம் பயில்" என்றது அதனையே.
1. திருமுறை - 4.94.8. 2. திருவாசகம் - திருச்சதகம் - 16.
|