1047. | பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து வேந்தன் தனக்கன்றி யாட்செய்வ தென்னே! விரிதுணிமேல் ஆந்தண் பழைய அவிழைஅன் பாகிய பண்டைப்பறைச் சேந்தன் கொடுக்க, வதுவும் திருவமிர் தாகியதே. | | 26 |
1048. | ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர் பாகங் கனங்குழை யாய்,அரு ளாயெனத் தில்லைப்பிரான் வேகம் தருஞ்சிம்புள் விட்டரி வெங்கதஞ் செற்றிலனேல், மோகங் கலந்தன் றுலந்ததன் றோவிந்த மூவுலகே. | | 27 |
1047. குறிப்புரை: 'சேந்தனார்' என்னும் அடியவர் பாடிய பாடல்கள் திருவிசைப்பாவில் இருத்தலுடன், திருப்பல்லாண்டு பதிகம் 9-ஆம் திருமுறையிறுதியில் தனியே உள்ளது. 'அப்பதிகத்தைப் பாடி இவர், செல்லாது நின்ற கூத்தப் பெருமான் தேரினைச் செல்லச் செய்தார்' என்பர். 'இவர் குலத்தால் தாழ்ந்தவர்' என்பது இப்பாட்டில், "பறைச் சேந்தன்" என்பதனால் குறிக்கப்பட்டது. திருவாதிரை நாளில் கூத்தப் பெருமானுக்கு அன்பர்கள் களி செய்து படைத்து வழிபடுதல் வழக்கம். கோயிலிலும் இது செய்யப்படும். 'அம்முறையில் செய்ய அரிசி கிடையாமையால் சேந்தனார் தவிட்டுக் களி செய்து துணியில் இட்டுப் படைத்தார்' என்பதும் 'அது மறுநாள் விடியலில் திருச்சிற்றம்பலக் கூத்தப் பெருமான் திருமேனியில் காணப்பட்டது' என்பதும் இவரைப் பற்றி வழங்கும் வரலாறுகள். அதுவே இப்பாட்டின், பின் இரண்டு அடிகளில் குறிக்கப்பட்டது. அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்த சடை வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பின் சேந்தனார் செய்த செயல்1 என இது திருக்களிற்றுப்படியாரிலும் கூறப்பட்டது. தனிப்பாடல் ஒன்றில், "தவிட்டமுதம் சேந்தன் இட உண்டனை" ... எனச் சிவஞான யோகிகள் கூறினார். இப்பாட்டில் அவிழ் - உணவு. "தண் பழைய" என்றது 'மிகவும் ஆறிப்போன' என்றபடி. 'குலத்தால் தாழ்ந்த ஒருவர் சுவையற்ற ஓர் எளிய உணவைப் படைக்க, அதனை மிக இனியதாக ஏற்றருளிய அந்தப் பெருமானுக்கு ஆட் செய்யாமல் பிறருக்கு ஆட் செய்வது என்ன அறியாமை' என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். இதனால் இவ்வாசிரியர் சேந்தனாருக்குப் பின்னர் வாழ்ந்தவராதல் அறியப்படும். 1048. குறிப்புரை: கனகன் - இரணியன். ஆகம் - மார்பு. "கனகனை ஆகம் கீறிய" என்றதை, 'யானையைக் காலை
1. வெண்பா - 53.
|