பக்கம் எண் :

765கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

1050.வேதகச் சிந்தை விரும்பிய வன்,தில்லை யம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்,சேய வன்,வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவா ளரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்ஐயன்; தந்த தலைமகனே.

29

1051.தலையவன்; பின்னவன்; தாய்;தந்தை; யிந்தத் தராதலத்து
நிலையவன் நீக்கு தொழில்புரிந் தோன்;அடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன்; ஆலத் தெழுகொழுந்தின்
இலையவன் காண்டற் கருந்தில்லை யம்பலத் துள்ளிறையே.

30

1052.இறையும் தெளிகிலர், கண்டும், எழில்தில்லை யம்பலத்துள்
அறையும் புனல்சென்னி யோனரு ளாலன்(று) அடுகரிமேல்

1050. குறிப்புரை: வேதகம் - இரச வாதத்தால் பொன்னாக மாறிய பிற உலோகங்கள் அவைபோலும் சிந்தையாவது, திருவருளால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானத்தை அடைந்த சிந்தை. அறிவு அதனை விரும்பியவன் என்றும், 'அதனால் விரும்பப்பட்டவன்' என்றும் இருபொருளும் கொள்க. "தந்த தலைமகன்" என்பதைக் "கோயில் கொண்டோன்" - என்பதன் பின்னர்க் கூட்டுக. தலைமகன் - விநாயகக் கடவுள். சேயவன் - முருகன். "வீரணக் குடிவாய் ... பெண்பிள்ளை" துற்கை 'இவ்விருவர்க்கும் ஐயன்; தமையன்' என்க. 'திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலை' 14-ஆம் பாடலைக் காண்க. போதகம் - யானை; அதன் தோல்; ஆகுபெயர். பொறி - புள்ளிகள். வாளரவு - கொடிய பாம்பு. பெற்ற மக்களது சிறப்புக் கூறு முகத்தால், பெற்றோனது சிறப்பு உணர்த்தியவாறு. சாதகம் - பேய்க் கூட்டம்.

1051. குறிப்புரை: "ஆலத்தெழு" என்பது முதலாகத் தொடங்கி, "இந்தத் தராதலத்து" என்பதை முதலிற் கூட்டி யுரைக்க. ஆலத்து எழு கொழுந்தின் இலையவன் - ஆல் இலையில் பள்ளி கொள்பவன்; மாயோன். தலையவன் - முன்னோன்; முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள் பின்னவன் - பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியன்.1 "தாய், தந்தை" என்றதனால் தோற்றுவித்தல் குறிக்கப்பட்டது. நிலையவன் - நிலைக்கச் செய்பவன் . நீக்கு தொழில் - அழிக்கும் தொழில். நடுவாகி நிற்றல் - இரு முனையோடு நடுவண் ஒரு முனையுடையதாய் இருத்தல். "கொலைய" என்பது தொழிலடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.

1052. குறிப்புரை: அடு கரி - கொல்லும் யானை. "கொல்லும்" என்றது இன அடை. ஆரூரன், சுந்தர மூர்த்தி நாயனார். தார்ப் பரி


1. திருவாசகம் - திருவெம்பாவை - 9.