| நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்,நிறை தார்ப்பரிமேல் நறையும் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே. | | 31 |
1053. | நல்வழி நின்றார் பகைநன்று, நொய்ய ருறவிலென்னும் சொல்வழி கண்டனம் யாம்;தொகு சீர்த்தில்லை யம்பலத்து, வில்வழி தானவ ரூரெரித் தோன்,வியன் சாக்கியனார், கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க, சிவகதியே. | | 32 |
... மணிக்கோவையணிந்த குதிரை. வில்லவன் - விற்கொடியையுடைய சேரன்; சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் யானைமீது ஏறிக் கயிலாயம் செல்கையில் வழியில் சிவ பெருமானைக் குறித்து, மண்ணுல கிற்பிறந்து நும்மை | வாழ்த்தும் வழியடியார் | பொன்னுல கம்பெறுதல் | தொண்ட னேன்இன்று கண்டொழிந்தேன்1 |
என அருளிச் செய்தார். அங்ஙனம், "மண்ணுலகத்தில் மக்களாய்ப் பிறந்தோர் சிவபெருமானை வாழ்த்தி வணங்கினால் அவர்கள் பின்பு அப்பெருமானுடைய உலகத்தை அடைவர்" என்னும் ஆகமப் பிரமாணம் காட்சிப் பிரமாணம் ஆனதையறிந்தும் மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்தோர் சிலர் அவ்ஆகமப் பிரமாணத்தைச் சிறிதும் தெளிகின்றிலர் - என்பதாம். இறையும் - சிறிதும். அறையும் - ஒலிக்கின்ற. சுந்தரர் யானைமேற் கயிலை சென்றபொழுது அவர்க்குத் தோழனாய் இருந்த சேரமான் பெருமாள் நாயனாரும் குதிரைமேல் உடன் சென்றதையறிக. 1053. குறிப்புரை: நொய்யர் - சிறியார். "நொய்யர் உறவில் நல்வழி நின்றார் பகை நன்று" என்னும் சொல்லாவது, பேதை பெருங்கெழீஇ நட்பின், அறிவுடையார் ஏதின்மை கோடி யுறும்2 என்னும் குறள். சாக்கிய நாயனார் சிவலிங்கத்தைக் கல்லால் எறிதலை நியமமாகக் கொண்டு செய்து முத்தி பெற்றார். கல்லால் எறிதல் பகைமைச் செயலாயினும் அன்பு காரணமாகச் செய்யப்பட்டது. இங்ஙனமே கண்ணப்ப நாயனார் தமது செருப்புக் காலைச் சிவலிங்கத்தின்மேல் வைத்ததும் இதனால், 'நல்வழியில் நிற்கும் நல்லோர் பிறர்க்குத் தீங்குபோல எவற்றையேனும் செய்வாராயினும் அச்செயற்குக் காரணம் பகைமையாகாது, அன்பேயாய் இருக்கும்' என்றபடி. 'வில்வழியாக' என ஆக்கம் விரிக்க. தானவர் - அசுரர்; முப்புரத்தவர். கல்வழி - கல்லை எறிந்ததே
1. திருமுறை - 7.100.5. 2. திருக்குறள் - 816.
|