பக்கம் எண் :

767கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

1054.கதியே! யடியவர்க்(கு) எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த
நிதியே! நிமிர்புன் சடையமிர் தே!நின்னை யென்னுள்வைத்த
மதியே! வளர்தில்லை யம்பலத் தாய்!மகிழ் மாமலையாள்
பதியே! பொறுத்தரு ளாய்,கொடி யேன்செய்த பல்பிழையே.

33

1055.பிழையா யினவே பெருக்கி,நின் பெய்கழற்(கு) அன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும், மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே!
புழையார் கரியுரித் தோய்!தில்லை நாத! பொறுத்தருளே.

34

1056.பொறுத்தில னேனும்பன் நஞ்சினைப் பொங்கெரி வெங்கத்தைச்
செறுத்தில னேனும்;நந் தில்லைப் பிரானத் திரிபுரங்கள்

வழியாக. நேர் நின்று - நேரே காட்சியளித்து "காண்க" என்பது அசை.

1054. குறிப்புரை: "கதியே" முதலிய நான்கும் விளிகள். கதி - புகலிடம். 'அனைத்துயிர்க்கும் கதியே' எனவும், 'கருத்தினுள் வைத்த நிதியே' எனவும் உரைக்க. மதியே - ஞான வடிவினனே. பதி - கணவன். இங்ஙனம் பலவாறு விளித்தும் பிழை பொறுக்க வேண்டி விண்ணப்பித்தபடி.

1055. குறிப்புரை: "மந்தாகினி ... தில்லை நாத! பிழையாயினவே ... பொறுத்தருள்" என இயைத்து முடிக்க. மந்தாகினி - கங்கை. துவலை - திவலை; துளி. 'கங்கையினது துளிகள் தனது முழையின்கண் வந்து ஆரப் பெறுகின்ற ('நிரம்பப் பெறுகின்ற தலை' என்க. தலை, வெண்டலை. புழை - உள்ளாற் செல்லும் துளை. "புழை ஆர்" என்பதில் உள்ள 'ஆர்', "கரி" என்பதன் முதனிலையோடு முடிந்தது. கரம் + இ = கரி. இதன் முதலிரண்டடிகளை.

பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச்

சுருக்குமன்பின்

வெற்றடி யேனை விடுதிகண்டாய்1
வெறுப்பனவே செய்யு மென்சிறுமையை நின்

பெருமையினால் - பொறுப்பவனே"2

என்னும் திருவாசகப் பகுதிகளோடு ஒப்பிட்டுக் காண்க.

1056. குறிப்புரை: "நம் தில்லைப்பிரான்" என்பதை முதலிற் கூட்டியும், 'நஞ்சினைப் பொறுத்திலனேனும்' எனவும் அமரருக்கு


1. நீத்தல் விண்ணப்பம் - 23.
2. அடைக்கலப் பத்து - 2.