| கறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியை அறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே. | | 35 |
அடுப்பன என்கொல்' எனவும் மொழி மாற்றியும் உரைக்க. எரி, தாருகாவன முனிவர் சிவபிரான்மேல் ஏவிய வேள்வித்தீ. அஃது அப்பெருமானை யாதும் செய்ய மாட்டாது. ஆயினும் ஆபிசார மந்திர ஆற்றலோடு கூடிய அத்தீத் தன்னை விட்டுச் சென்று பலரை இரையாக்கிக் கொள்ளாதபடி அப்பெருமான் அதனைத் தன் கையில் ஏந்திக் கொண்டான். அயன் - பிரமன். அவன் செருக்கு மிகுதியால் சிவபெருமானை, "என் மகனே! வா" என்றான். 'அவன் கூறிய சொல் பொல்லாச் செருக்குச் சொல்லேயன்றி, உண்மையன்று' என்பதை உணர்த்தச் சிவபெருமான் தன்னை அங்ஙனம் அழைத்த அவனது உச்சித் தலையைக் கிள்ளி எடுத்தார். பிரமன் சிவபெருமானைப் படைக்கும் அளவிற்கு ஆற்றல் உடையனாயின், அவரால் பறிக்கப்பட்ட அத்தலையை உடனே முன்போலத் தோற்றுவித்துக் கொள்வான் அல்லனோ? பிரமன் படைப்பதும், மாயோன் காப்பதும், பிறவும் எல்லாம் சிவபிரானது சங்கற்பத்தின்படியல்லது, தங்கள் சங்கற்பத்தின்படியல்ல' என்பதையே இத்தகைய புராண வரலாறுகள் விளக்குகின்றன. பித்தன்உனது ஓர்தலை பிடுங்கிஎறி போதில் | அத்தலை நமக்கென அமைக்கவிதி யில்லாய் | எத்தலைவன் என்பதுனை? இத்தகைமை கொண்டோ | பைத்தலை அராமுடிகொள் பாரிடம் விதித்தாய்? | எனப் பிற்காலத்து ஆன்றோரும்1 கூறினார். | | அயன்றனை யாதி யாக | அரனுரு என்ப தென்னை? | பயந்திடும் சத்தி யாதி பதிதலால் |
எனவும், சத்திதான் பலவோ என்னில் | தான்ஒன்றே அநேக மாக | வைத்திடும் காரியத்தால் | மந்திரி யாதிக் கெல்லாம் | உய்த்திடும் ஒருவன் சத்திபோல் | அரனுடைய தாகிப் | புத்தி முத்திகளை யெல்லாம் | புரிந்து அவன் நினைந்தவாறாம் |
என்னும் சிவஞான சித்திச் செய்யுள்களைக் காண்க2
1. சைவ எல்லப்ப நாவலர் - அருணாசல புராணம் -திருமலைச் சருக்கம். 2. முதற் சூத்திரம் - 60, 61.
|