பக்கம் எண் :

769கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

1057.அடுக்கிய சீலைய ராய்,அக லேந்தித் தசையெலும்பில்
ஒடுக்கிய மேனியோ(டு) ஊணிரப் பாரொள் ளிரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்றன் தில்லை தொழாவிட்ட ஏழையரே.

36

1058.ஏழையென் புன்மை கருதா(து) இடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே மருவ அருளுகண்டாய்;
மாழைமென் நோக்கிதன் பங்க! வளர்தில்லை யம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே.

37


'ஒரு கற்பத்தில் உண்டாக்கப்பட்ட பிரம தேவனுக்குப் படைத்தல் தொழிலைக் கற்பித்தற் பொருட்டுச் சிவபெருமானது சங்கற்பத்தின்படி அவனது நெற்றியினின்று நீலலோகிதன் முதலிய உருத்திரர் பதினொருவர் தோன்றினர்' என்பது புராண வரலாறு. இஃதே பற்றி, பிரமன் உருத்திரனைப் படைத்தான்' என வைணவர்கள் சிவபெருமானைப் பிரமனிலும் தாழ்ந்தவனாகக் கூறிக் கொள்கின்றார்கள். 'உருத்திரன்' எனச் சிறப்பாகக் கூறப்படுபவர், அயன், மால் இருவர்க்கும் மேலாய் நின்று, பிரகிருதி மாயா உலகங்களை அழித்தல் தொழிலைச் செய்யும் சீகண்ட உருத்திரர். இவரைப் பிரமனிலும் தாழ்வாகக் கூறுதல் தத்துவ முறையோடு மாறுபடுவதாகும். பிரமனது செருக்கினால் உண்மை மறைக்கப்பட்டதுடன், அவனது படைத்தல் தொழிலும் தாறுமாறாய் நிகழ, உலகத்திற்குப் பல தீமைகள் உளவா மாகலின், 'அவையெல்லாம் நிகழாமைப் பொருட்டு அவனது தலையைச் சிவபெருமான் கிள்ளினார்' என்றபடி. அடுப்பன - விளைவன. இஃது இறந்த காலத்தில் எதிர்காலம். பன்னுதல் - சொல்லுதல். அஃதாவது, தேவர் 'உண்டருள்க' என்றது. கதம் - கோபம். செறுத்தல் - அடக்குதல். கறுத்தல் - கோபித்தல். அஃது இங்கு அழித்தலாகிய தன் காரியத்தைத் தோற்றி நின்றது. கொல், ஐயப் பொருட்டு.

1057. குறிப்புரை: அடுக்கிய சீலை - கிழிந்த துளைகள் தோன்ற ஒட்டாமல் பல மடிப்புக்களாக மடிக்கப்பட்ட சீலை. அகல் - மண்டை; மட்பாத்திரம். 'எலும்பில் தசை ஒடுக்கிய மேனி' என்க. அஃதாவது எலும்புகள் நன்கு தோன்றும் உடம்பு. நடுக்கிய - நடுங்கச் செய்த. நரல் - (சிங்கன்) அலறம்படி. ஏழையர் - அறிவிலிகள் (முற்பிறப்பில்) தில்லை தொழாத ஏழையர்கள் (இப் பிறப்பில்) வறியராய் ஊண் இரப்பார்கள்' என்க.

1058. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை வாழி, அசை. மாழை - மாவடு.