பக்கம் எண் :

771கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

நிரந்தர மாய்நின்ற வென்னையும் மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்; பேசருந் தன்மையிதே.

41

1063.தன்தாள் தரித்தார் யாவர்க்கும் மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடையுடையோன்
மன்றா டவும்,பின்னும் மற்றவன்பாதம் வணங்கியங்கே
ஒன்றார் இரண்டில் விழுவரந் தோ!சில வூமர்களே.

42

1064.களைக ணிலாமையுந் தன்பொற் கழல்துணை யாந்தன்மையும்
துளைக ணிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையான்;
தளைக ணிலாமலர்க் கொன்றையன், தண்புலி யூரனென்றேன்,
வளைக ணிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே.

43


'தன் அடியார், மெய்மையில் தரம் தரு செல்வம்' என்க. தரம் தருதல் - மேன்மையடைதல். தன்மையுடையதனை, "தன்மை" என்றார். 'இது பேசருந் தன்மையுடையது ஆதலின், இதன்மேலும் (எனக்கு அவன்) வரம் (மேன்மை) தருமாறு உண்டோ' என முடிக்க.

1063. குறிப்புரை: "சில ஊர்மக்கள்" - என்பதை முதலிற் கூட்டியுரைக்க. ஊமர் - பேச அறியாதவர். ஒழுகும் நெறியறியாதவரை இங்ஙனம் 'பேச அறியாதவர்' என்றல் வழக்கு. "கோடி மேல் விடையுடையான்" என்பது, 'சிவன்' என ஒரு சொல் தன்மைப்பட்டு நின்று, "தில்லை மூதூர்" என்பது ஏழாவதன் பொருள்படத் தொக நின்றது. "ஆடவும்" என்னும் உம்மை எளிமையை உணர்த்தி நிற்றலின் இழிவு சிறப்பும்மை. 'மன்றில் ஆடவும் வணங்கி ஒன்றார்' என்க. மற்று, அசை. அங்கே - அம்மன்றிலே. ஒன்றுதல் - மனம் ஒருங்குதல். இரண்டு, பிறப்பும் இறப்பும். இது தொகைக் குறிப்பு.

1064. குறிப்புரை: இப்பாட்டுத் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி யுரைக்க. தளைகள் நிலா மலர் - கட்டு (முறுக்கு - அரும்பாய் இருக்கும் நிலை) நில்லாத, (நிலா, இடைக்குறை) எனவே, நன்கு மலர்ந்த மலர். 'கொன்றையன்' என்றும், 'புலியூரன்' என்றும் ஒருமுறை சொன்னேன். அது காரணமாகக் கையில் வளைகள் நில்லாது கழன்று வீழும்படி அநங்கனது (மன்மதனது) வரிந்து கட்டப்பட்ட வில் என்னை நோக்கி