1065. | வரித்தடந் திண்சிலை மன்மத னாதலும் ஆழிவட்டம் தரித்தவன் தன்மக னென்பதோர் பொற்புந் தவநெறிகள் தெரித்தவன், தில்லையுட் சிற்றம் பலவன் திருப்புருவம் நெரித்தலும் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே. | | 44 |
1066. | நின்றில வேவிச யன்னொடுஞ் சிந்தை களிப்புறநீள் தென்தில்லை மாநட மாடும் பிரான்தன் திருமலைமேல் தன்தலை யால்நடந் தேறிச் சரங்கொண் டிழிந்ததென்பர் கன்றினை யேவிள மேலெறிந் தார்த்த கரியவனே. | | 45 |
வளையா நின்றது. இது பற்றி அச்சுரன் (தேவன், சிவபெருமான்) நினைகின்றானில்லை. 'அதுவே என் வேறுபாட்டிற்குக் காரணம்' என்பது குறிப்பெச்சம். கணைகள் - பற்றுக்கோடு. 'கழலே' என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. 'கண் நிலாவும் முகத்தையும், துளை நிலாவும் கையையும் உடைய கரி' என எதிர்நிரல் நிறையாக இயைத்துரைக்க. "நிலாமை" என்பது எதிர்மறை வினையெச்சம். 'சுரம் நினையான்' என்பது பாடமன்று. 1065. குறிப்புரை: 'சிற்றம்பலவன் (மன்மதனை நோக்கித்) திருப்புருவம் நெரித்த மாத்திரத்தில் கண்டது சாம்பலேயன்றி, அவனது பேரழகும், 'திருமால் பெற்ற மகன்' என்னும் புகழும் சிறிதும் நின்றில என்க. 'மன்மதனை நோக்கி' என்பது முன்னர்ப் போந்த சொற்களின் குறிப்பால் வந்து இயைந்த இசையெச்சம். தவநெறிகள் - சிவதன்ம வழிகள். 1066. குறிப்புரை: பாரத - இதிகாசத்துள், 'பதின்மூன்றாம் நாட்போர் முடிந்தபின் இரவில் கிருட்டினன் அருச்சுனனை அவனது சூக்கும தேகத்தோடு மட்டும் உடன் கொண்டு கயிலாயத்தை அடைந்து, சிவபெருமானைத் தரிசிப்பித்து, அப் பெருமான் முன்பு அவனுக்கு வழங்கிய பாசுபதாத்திரம் இந்திரன் பொருட்டு அவனால் 'நிவாத கவச காலகேயர்' என்னும் அசுரர் மேல் ஏவப்பட்டமையால் அஃது அவ் வசுரர்களையழித்துவிட்டுக் கயிலாயத்துள் சென்றிருந்ததைத் திரும்பப் பெற்றுக்கொள்ளச் செய்து மீண்டு குருச்சேத்திரத்தை அடையச்செய்தான்' எனக் கூறப்பட்டது. அப்பொழுது கிருட்டினன் கயிலாய மலைமேல் 'காலால் நடத்தல் கூடாது' தலையால் நடந்து ஏறினமை இப்பாட்டால் அறியப்படுகின்றது. இப்பாட்டு அந்தாதியாய் அமைதற் பொருட்டு, "நின்றலவே" என்பது பாடமாகக் காணப்பட்ட போதிலும் "நின்றிரவே" என்பதே பாடமாகும். அப்பாடம் அந்தாதிக்கு மாறாவதன்று. "நின்று" என்பதை "ஏறி" என்பதன் பின்னர்க் கூட்டுக. 'கரியவன் இரவே விசயன்னொடும் திருமலைமேல் சரம் கொண்டு இழிந்தது தலையால் நடந்து ஏறி நின்று' என இயைத்து முடிக்க.
|