1067. | கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன்; விருப்புரு வத்தினொ டுள்ளம் உருகேன்; விதிர்விதிரேன்; இருப்புரு வச்சிந்தை யென்னைவந் தாண்டது மெவ்வணமோ பொருப்புரு வப்புரி சைத்தில்லை யாடல் புரிந்தவனே. | | 46 |
1068. | புரிந்தவன் பின்றியும் பொய்ம்மையி லேயும், திசைவழியே விரித்தகங் கைம்மலர் சென்னியில் கூப்பின், வியன்நமனார் பரிந்தவ னூர்புக லில்லை; பதிமூன்(று) எரியவம்பு தெரிந்தவெங் கோன்தன் திரையார் புனல்வயற் சேண்தில்லையே. | | 47 |
1069. | சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டுமன்பு பூண்டிலை; நின்னை மறந்திலை; யாங்கவன் பூங்கழற்கே மாண்டிலை; யின்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான் மீண்டனை; யென்னையென் செய்திட வோ?சிந்தை! நீவிளம்பே. | | 48 |
1067. குறிப்புரை: கரும்பு + உருவம் = கருப்புருவம். 'கரும்பு போலும் உருவம்' என்க. கரும்பு போலுவதாவது கண்டார்க்கு இனிதாதல். 'அவ்வுருவத்தைக் குறிக்கின்ற திருவார்த்தைகள்' என்க. விருப்பு உருவம் - அன்பே வடிவான உடம்பு. இரும்பு + உருவம் = இருப்புருவம், இங்கு "உருவம்" என்றது தன்மையை. பொருப்பு உருவப் புரிசை - மலை போலும் உருவத்தையுடைய மதில். 1068. குறிப்புரை: இப்பாட்டிற்கு முதற்கண் 'ஒருவன்' என்னும் எழுவாய் வருவிக்க. பொய்ம்மையிலே - பொய்யாகவே; அஃதாவது மனம் பற்றாது மற்றவர் செய்வது போலச் செய்பவனாய். திசைவழியே - ஒரு திசை நோக்கிச் செல்லும் வழியில். அகங் கைம்மலர் - உள்ளங்கையாகிய மலர்கள், "விரிந்து" என்பதனை, 'விரிய' எனத் திரிக்க. 'முன்னே விரியப் பின்னே கூப்பின்' என்க. அகங்கை இரண்டனையும் விரித்தல் ஒருவகை ஆவாகன முத்திரை. இறைவனிடம் ஒன்றை வேண்டுதற்கும் இம்முத்திரை பயன்படும். 'அவன்பால் மட்டு மன்று; அவனது ஊர்க்குள்ளும் நமனார் புகலில்லை' என்பதாம். 'ஒருவன் தில்லையை நோக்கிச் சென்னியிற் கைகூப்பினால் அவனது ஊர்க்குள்ளும் நமனார் புகலில்லை' என்க. பரிந்து - விரைந்து. பதிமூன்று - முப்புரம். 1069. குறிப்புரை: சேண் - அகன்ற இடம். 'திவ்வியம்' என்பது "திப்பியம்" எனத் திரிந்து வந்தது. திவ்வியம் - தெய்வத் தன்மை. சிந்தை அடங்குதலை, 'அது தன்னை மறத்தல்' என்றார். கழற்கு -
|