1075. | பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர்; புயல்மறந்த கன்னல்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற்(கு) அன்றுபுன்கூர் மன்னு மழைபொழிந்(து) ஈரறு வேலிகொண் டாங்கவற்கே பின்னும் மழைதவிர்த்(து) ஈரறு வேலிகொள் பிஞ்ஞகனே. | | 54 |
என்னும் நாலடிச் செய்யுளைக் காண்க. இதில் 'போற்றுதல்' என்றது, "ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்தல்"1 போல, மற்றவர்கள் உயர்த்துப் பேசுதலைக் கேட்டுத் தாங்களும் உயர்த்துப் பேசுதல். 'சிவாகமப் பொருளை அறியாதவர்கட்குப் பிற நூல்களின் உண்மைப் பொருள் விளங்காது' என்பதாம். அசிக்க ஆரியங்கள் ஓதும் | ஆதரைப் பேத வாதப் | பிசுக்கரைக் காணாகண், வாய் | பேசாதப் பேய்க ளோடே2 |
எனவும், ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்பற்று வட்டணை பேசுவர்3 எனவும் போந்தனவும். இக்கருத்தே பற்றி எழுந்தனவாம். 'எங்குள்ளதோ' என்பதை, 'எங்கித்ததோ' என்றல் ஒரு வட்டார வழக்கு. "எங்கிருந்தோ" என்றது, 'அறிய வாராது' என்றபடி. 1075. குறிப்புரை: "பொன்னம்பலத்துறை புண்ணியன் என்பர்" - என்பதனை இறுதியிற் கூட்டுக. புயல் - மேகம். அஃது இங்கு மழையைக் குறித்தது. கன்னல் - நாழிகை; அஃது இங்குப் பொதுவாக, 'காலம்' எனப் பொருள் தந்து நின்றது. மை - குற்றம். அது மழை பெய்யாமைக்குக் காரணமாகிய குற்றம். தீர - தீர்ந்தமையால் 'தீர்ந்தது பிரார்த்தனையினால்' என்க. நீற்றுக் கலிக்காமன் திருநீற்றை யணிந்த (அஃதாவது பிரார்த்தித்து அணிந்த) ஏயர்கோன் கலிக்காம நாயனார். 'புன்கூர் - அந்நாயனாருக்கு உரியதாய் இருந்த திருப்புன்கூர். 'புன்கூரில்' என ஏழாவது விரிக்க. கலிக்காம நாயனார் தாமும், தம்மைச் சார்ந்த மக்களும் ஏதோ பிழை செய்தமையால் மழை பெய்யா தொழிந்தது' எனக் கருதி, அப்பிழை தீர்தற்குப் பன்னிரண்டு வேலி நிலத்தைத் திருப்புன்கூர் இறைவருக்குத் தேவதானமாகக் கொடுப்பது' என்று பிரார்த்தித்துக் கொண்டமையால் மழை பெய்யத் தொடங்கியது. தொடங்கிய மழை விடாது பொழிந்தமையால் மழை நின்றால், மற்றும் பன்னிரு வேலி
1. திருவாசகம் - திருச்சதகம் - 87. 2. திருமுறை - 9. "இணங்கிலா ஈசன்" 3. திருமுறை - 11. கோபப் பிரசாதம் - அடி. 84, 85.
|