பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை778

1076.நேசனல் லேன்;நினை யேன்;வினை தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ் சேனென்தன் வாயதனால்
தேசனென் னானைபொன் னார்திருச் சிற்றம் பலம்நிலவும்
ஈசனென் னேன்பிறப்(பு) என்னாய்க் கழியுங்கொல்! என்தனக்கே

55

1077.தனந்,தலை, சக்கரம், வானத் தலைமை குபேரன்,தக்கன்,
வனந்தலை ஏறடர்த் தோன்,வா சவன்உயிர், பல்லுடலூர்
சினந்தலை காலன், பகல்,காமன், தானவர், தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்னரு ளால்முனி வால்பெற் றிகந்தவரே.

56


தேவதானம் செய்வதாகப் பிரார்த்தித்தமையால் மழை நின்றது. இச் செய்தியைச் சுந்தர மூர்த்தி நாயனார் தமது திருப்புன்கூர்த் தலப் பதிகத்து இரண்டாம் பாடலில் குறித்தருளினார். அஃதே இப்பாட்டிற் கூறப்பட்டது. 'பொழிவித்து' என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது. ஈற்றடியில், பின்னும் பிழை தவிர்த்து என்பது பாடமன்று. ஈற்றில் தொகுக்கப்பட்ட 'பிஞ்ஞகனை' என்னும் இரண்டாம் வேற்றுமையை விரிக்க.

1076. குறிப்புரை: நேசன் - அன்பன். 'வினை நீக்கும்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். தேசன் ஒளியுடையவன். 'ஆனை' என்பது காதற் சொல். என்னேன் - என்று துதியேன். 'இப்பிறப்பு' எனச் சுட்டு வருவிக்க. என் ஆய் - என்ன பயன் தந்ததாய். 'யாதொரு பயனையும் தந்ததாகாது வீணாய்க் கழியும் போலும்' என்பதாம். கொல், ஐயம். 'என்றனக்கு என் ஆய்' எனக் கூட்டுக.

1077. குறிப்புரை: 'தில்லைத் தலைவன் அருளால் தனமும், தலையும், சக்கரமும், வானத் தலைமையும் பெற்றவர் முறையே குபேரனும், தக்கனும் ஏறடர்த்தோனும், வாசவனும்' எனவும், 'அவன் முனிவால் உயிரையும், பல்லையும், உடலையும், ஊரையும் இகந்தவர் முறையே காலனும், பகலவனும், காமனும், தானவரும்' எனவும் இயைத்துப் பொருள் கொள்க. இது நிரல்நிறையணி. 'தில்லைப் பெருமான் அன்பர்கட்கு அருளையும், வன்பர்கட்கு ஒறுப்பையும் அளிக்க வல்லவன்' என்பதாம். தனம் - செல்வம். வானத்தலைமை - வானுலக ஆட்சி. ஏறு அடர்த்தான், நப்பின்னையை மணப்பதற்காகக் காளைகளைத் தழுவிக் கொன்றவன். கண்ணன், திருமால். வனந் தலை ஏறு - காட்டில் சென்று மேயும் காளைகள். சினந்து அலை காலன் - உயிர்கள்மேல் கோபித்துத் திரிகின்ற யமன். பகலைச் செய்பவனைப் "பகல்" என்றார். 'இனத் தலைவன்' என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. "பெற்று இகந்தவர்" என்பதில்