பக்கம் எண் :

779கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

1078.அவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும்
தவமதித்(து) ஒப்பில ரென்னவிண் ணாளுந் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம் பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும், நினைந்திட்ட செல்வருமே.

57

1079.வருவா சகத்தினில், முற்றுணர்ந் தோனை,வண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.

58

 

"பெற்று" என்னும் எச்சம் எண்ணின்கண் வந்ததாகலின், 'பெற்றவர், இகந்தவர்' என்றவாறு.

1078. குறிப்புரை: அவமதித்து - (கூற்றுவனால்) இகழப் பட்டு. ஆதர் - அறிவிலிகள். தவம் மதித்து - தவத்தை மேன்மையாக மதித்துச் செய்து. சிவ நிதி - சிவனாகிய செல்வம். 'நிதிக்கே' என்னும் நான்காம் உருபை இரண்டாம் உருபாகத் திரிக்க. ஈற்றில் 'ஆவர்' என்னும் பயனிலை வருவித்து முடிக்க. 'நினையாதவர் நரகம் புகுவர்' எனவும், 'நினைந்தவர் சிவ லோகம் பெறுவர்' எனவும் கூறியவாறு.

1079. குறிப்புரை: 'வரு வாசகத்தினில் செய்' என இயையும். வரு வாசகம் - திருவருளின் வழித் தமது நாவில் வந்த சொற்கள். இவை 'திருவாசகம்' - எனப் பெற்றன. சிவ பாத்தியன் - சிவனது பாத சம்பந்தத்தை (திருவடி தீட்சையை)ப் பெற்றவன்; திருவாதவூரடிகள். 'திருவாசகம் மாணிக்கம் போன்றது' என்னும் கருத்தால் அவ்வாசகத்தை வெளியிட்ட அடிகள் 'மாணிக்க வாசகர்' எனப் பெயர் பெற்றார். இவரை 'ஆதிசைவ அந்தணர்' என அறிஞர்1 கருதுவர். இவர் தில்லைப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து அருளிச் செய்த கோவைப் பிரபந்தம், 'திருச்சிற்றம்பலக் கோவையார்' என்றும், 'திருக்கோவையார்' என்றும் சொல்லப்படுதல் இப் பாட்டில் குறிக்கப்பட்டமை காண்க. "வருவாசகத்தினில் செய்" என்றதனால் இதுவும் திருவாசகமேயாக குறிக்கப்பட்டது. இதனைக் 'கோவைத் திருவாசகம்' என்பர். இக்கோவையாரை இவ்வாசிரியர் (நம்பியாண்டார் நம்பிகள்) எட்டாம் திருமுறையாகச் சேர்த்திருத்தல் வெளிப்படை. அப்பொருள், அதில் சொல்லப்பட்டுள்ள உலகியற் பொருள், அறிவன் நூற் பொருள்2 'கவியாற் பாடி' என மூன்றாவது விரிக்க. 'அப் பெருமானைச் சிரிக்கச் செய்வர்' என்க. சிரித்தல் -


1. திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள், எம்.ஏ., எம்.எல்.
2. திருக்கோவையார்க்குப் பேராசிரியர் உரையின்உரைப்பாயிரம்.