பக்கம் எண் :

781கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

1082.விட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியன்;நல் லானல்லன்; அம்பலத் தெம்பரன்மேல்
கட்டங் கியகணை யெய்தலுந் தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று பார்க்கப் பொடிந்தனனே.

61

1083.பொடிஏர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு, கோயிற் கருவியில்லா,
வடியே படவமை யுங்கணை யென்ற வரகுணன்தன்
முடி ஏர்தருகழ லம்பலத் தாடிதன் மொய்கழலே.

62


"விழித்தாற்கு" என்னும் குவ்வுருபை, 'முன்' என்னும் பொருட்டாகிய கண்ணுருபாகத் திரிக்க. வில் - ஒளி. 'விற் பூண்' என இயையும். கொடுமை - வளைவு. பூண் - அணிகலம். விடும் சினத் தானவர் - சினத்தை விட்டொழித்த அசுரர். வெய்தென - விளைவாக. 'ஒடுக்கிய' என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. "நின்று" என்பது ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு. 'அந்நாள் முதலாக' என்பது.

1082. குறிப்புரை: மதன் - மன்மதன். மெய் - உடம்பு - கரியன் - கருமை நிறமானவன். இட்டம் - விருப்பம். இதனை, 'கரியன்' என்பதன் பின்னர்க்கூட்டி, "இட்டம் நல்லனல்லன்' என குணவினை குணிமேல் நின்றதாக உரைக்க. "நல்லனல்லன்" என்பதன்பின், அதனால் என்னும் சொல்லெச்சம் வருவிக்க. கள் - தேன். கள் தங்கிய கணை, மலர்க் கணை. தன்னை - அவனை. புள் மேல் தங்கினான் - கருட வாகனத்தின் மேல் வருபவன்; திருமால். 'அவன் பொன்னார் முடியை உடையவன்' 'திருமால் மகன்' என்பது, 'மன்மதன்' என்னும் பெயரளவாய் நின்றது. என்று - என்று தெரிந்து. பார்க்க - நெற்றிக் கண்ணைத் திறந்து பார்க்க. பொடிந்தனன் - சாம்பலாயினான். 'சிவபெருமான் ஒறுப்பது தீயோரையே' என்றபடி.

1083. குறிப்புரை: "அம்பலத்து ஆடிதன் மொய்கழல்" என்பதை முதலில் வைத்து உரைக்க. 'வரகுணன்' என்னும் பாண்டியன் மிகுந்த சிவபத்தனாய் இருந்த நிலையில் பகைவர்கள் படையெடுத்து வந்து அவன்மேற் போர் தொடுக்க, அவன் திருநீற்றையே கவசமாகப் பூசிக்கொண்டு நிராயுதனாய்ப் போர்க்களத்தில் சென்று நிற்கப் பகைவர்கள் விட்ட அம்புகள் அவனை ஒன்றும் செய்யாமல், அவன் காலடியிலே வீழ்ந்தன' என்பது இப்பாட்டுள் கூறப்பட்டது. இதுவும், இதுபோல இவனது பத்தி மிகுதியை விளக்குவனவாக பதினொன்றாம் திருமுறையில் உள்ள பட்டினத்து அடிகள் பாடலும், திருவிளையாடற் புராணங்களும் கூறும் செய்திகளும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்ட இருவர் வரகுணருள் ஒருவனுக்கும் அக்கல்வெட்டுக்கள் கூறாமையால் 'கல்வெட்டுக்கள் கூறும்