1088. | பற்றற முப்புரம் வெந்தது, பைம்பொழில் தில்லைதன்னுள் செற்றரு மாமணிக் கோயிலின் நின்றது, தேவர்கணம் சுற்றரு நின்புக ழேத்தித் திரிவது சூழ்சடையோய்! புற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே. | | 68 |
1089. | புல்லறி வின்மற்றைத் தேவரும், பூம்புலி யூருள்நின்ற அல்லெறி மாமதிக் கண்ணியன் போ லருளுவரே கல்லெறிந் தானுந்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த நல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே. | | 69 |
1090. | நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி, நமனுலகத்(து) எண்ணினை நீக்கி இமையோ ருலகத் திருக்கலுற்றீர்! | | |
விகுதியின் பின் 'மின்' என்பது விகுதிமேல் விகுதியாய் வந்து, "பணியுமின்" என்றாயிற்று. 1088. குறிப்புரை: "சூழ் சடையோய்" என்பதை முதலிற் கொள்க. சூழ்தல் - சுற்றிலும் சுழலுதல். 'உனது வெகுளியால் முப்புரம் வெந்தது. நீ உயர்ந்த மாணிக்கக் கோயிலிலே இருப்பது, தேவர் கூட்டம் உன்னையே புகழ்ந்து திரிவது இவையெல்லாம் உனக்குப் பெருமையைத் தருகின்றன. ஆயினும், நீ எங்கும் பாம்பாட்டித் திரிவது ஒன்று மட்டும் உனக்குச் சிறுமையைத் தருகின்றது' என்பது இப்பாட்டின் பொருள். "திரிவது" என்பதன், 'இவை பெருமைய' என்பது வருவிக்க. 'ஆகையால் அதனை நீ விட்டொழிக' என்பது குறிப்பெச்சம். சிவபெருமானுக்கு இவற்றால் எல்லாம் பெருமையோ, சிறுமையோ உண்டாதல் இல்லை' என்பது இதன் உள்ளுறைப் பொருள். செல்தரு உயரத்தால் மேகங்களைத் தடுத்து நிறுத்துகின்ற, சுற்று - எங்கும் பரவிய. அரு - அருமையான. 1089. குறிப்புரை: மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி யுரைக்க. சிவலிங்கத்தின் மேல் மறவாது கல்லெறிந்தவர் சாக்கிய நாயனார். சிவலிங்கத்தின் மேல் வாய்நீரை உமிழ்ந்தவர் கண்ணப்ப நாயனார். இவ்விருவரும் இச் செயல்களால் தீக்கதி அடையாது உள்ளத்து அன்பே காரணமாக, மீளா வழியாகிய வீட்டு நெறியிற் சென்று முத்தியை அடைந்தார்கள். செயலை நோக்காது உள்ளத்தை நோக்கி இவ்வாறு அருள்செய்த தேவர் பிறர் இருக்கின்றனரா? என வினவுகின்றார். 'செயலை விடுத்து உள்ளத்தையறிதல் முற்றறிவுடையனுக்கே கூடும்' என்பதாம். அவ் எறி மதி - இராக் காலத்தில் ஒளி வீசுகின்ற திங்கள். 1090. குறிப்புரை: 'நாசத்திற் செலுத்தி' என ஏழாவது விரிக்க. நமன் உலகத்து எண் - யமனது உலகத்தைப் பற்றிய நினைவு. அது
|