பக்கம் எண் :

785கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

பெண்ணினொர் பாகத்தன், சிற்றம் பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை யாரத் தொழுமின்களே.

70

1091.கைச்செல்வ மெய்திட லாமென்று பின்சென்று, கண்குழியல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட் கேயென்றும் பொன்றலில்லா
அச்செல்வ மெய்திட வேண்டுதி யே;தில்லை யம்பலத்துள்
இச்செல்வன் பாதங் கரு(து)இரந் தேனுன்னை; யென்னெஞ்சமே.

71

திருச்சிற்றம்பலம்


விடாத ஆகு பெயராய், அதுபொழுது நிகழும் அச்சத்தைக் குறித்தது. இருக்கல் உற்றீர் - இருக்க விரும்புபவர் களே! 'உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டுமாயின் நீங்கள் பெருநடனைக் கண்டு தொழுமின்கள்' என்க. ஆர்தல் - நிரம்புதல். அஃதாவது இன்பம் நிரம்புதல். 'பெண்ணினை' என்பதில் சாரியை நிற்க இரண்டன் உருபு தொகுதல் இலேசினாற் கொள்க1. இனி, 'பெண்ணினது பாகத்தன்' என ஆறாவது விரித்தலும் அமைவுடையதே. நடன் - நடனம் ஆடுபவன்.

1091. குறிப்புரை: கைச் செல்வம் - கைப் பொருள். கருத்து நோக்கி, 'பொய்ச் செல்வர் பின் சென்று அவர் செய்திடும் புன்மைகட்குக் கண்குழியல்' என உரைக்க. கண் குழியல் - கண் குழியற்க. கண் குழிதல் - பட்டினியால் 'கண் குழித்தல்' என்பது பாடம் அன்று. புன்மைகள் - அற்பச் செயல். அவை 'இல்லை' எனக் கரத்தலோடு, இகழ்தலையும் செய்தல். 'புன்மைகட்கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபை, 'புன்மையால்' என மூன்றாவதாகத் திரிக்க. "வேண்டுதியே" என்னும் ஏகாரம் தேற்றம். இதன்பின், 'அதற்கு' என்பத வருவிக்க. இப்பாட்டின் இறுதியை முதற்பாட்டின் முதலோடு மண்டலிக்க வைத்தமையின் இவ் அந்தாதி எழுபது பாட்டுக்களோடே முடிக்கப்பட்டதாம். அந்தாதிகள் சில இவ்வாறு எழுபது பாட்டோடே முடிதலும் மரபே.

கோயில் திருப்பண்ணியர் விருத்தம் முற்றிற்று


1. தொல் - எழுத்து - தொகை மரபு.