நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்த 33. திருத்தொண்டர் திருவந்தாதி சிறப்புப் பாயிரம் திருச்சிற்றம்பலம் 1092. | பொன்னி வடகரை சேர்நாரை யூரிற் புழைக்கைமுக மன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல் பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்குமந் தாதினைச் சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே. | | |
1092. குறிப்புரை: இப்பாட்டுப் பிற்காலத்தவரால் சிறப்புப் பாயிரமாகச் செய்து சேர்க்கப்பட்டது. திருத்தொண்டர் களாகிய நாயன்மார்களது வரலாற்றைப் பொதுவாகச் சுட்டும் முறையில் சுந்தர மூர்த்தி நாயனார் பெயரளவாக ஒரு திருப்பதிகத்தில் தொகுத்து அருளிச் செய்தார். அதனால் திருத்தொண்டர்களது வரலாற்றுத் தொகையாயிற்று. அத்திருப்பதிகத்தில் சுட்டப்பட்ட நாயன்மார்களது நாடு, ஊர், குலம், அவர்கள் செய்த தொண்டு இவைகளை ஓரொரு சொல்லால் கூறி ஒருவருக்கு ஒருபாட்டினை அந்தாதியாகச் செய்தமையால் 'திருத்தொண்டர் திருவந்தாதி' எனப் பெயர்பெற்ற இவ்வந்தாதி நாயன்மார்களது வரலாற்று வகையாயிற்று. இவைகளையும், 'இதை அருளிச் செய்தவர் திருநாரையூர் நம்பிகள் என்பதையும், இவர் அத்தலத்து விநாயகர் திருவருளைப் பெற்ற திருவருட்செல்வர்' என்பதையும் இப்பாட்டுக் கூறிற்று. 'ஆண்டார்' என்பது ஒரு காலத்தில் ஆதி சைவர்களைக் குறிக்கும் சிறப்புப் பெயராய் வழங்கிற்று ஆகலின், 'நம்பியாண்டார்' என்பதே இவரது பெயராயிற்று. இதற்கு மேலும் இவரது சிறப்பைக் குறிப்பதாக 'நம்பி' என்பதைச் சேர்த்து, 'நம்பியாண்டார் நம்பிகள்' என வழங்குவர். 'நாயன்மார்களது ஊர், குலம், தொண்டு இவைகளைத் திருநாரையூர் விநாயகர் சொல்ல இவர் பாடினார்' என இப்பாட்டுக் கூறுகின்றது. இதனை வைத்துத் திருமுறை கண்ட புராணமும் இவ்வாறே கூறிற்று.1 இதனை ஆராய்ச்சியாளர் 'நம்பிகள் விநாயகப் பெருமானது திருவருளைப் பெற்ற திருவருட் செல்வர்' - என்னும் அளவில் கொள்கின்றனர். 'இத் திருவந்தாதியைச் சேக்கிழார்
1. பாட்டு - 12.
|