பக்கம் எண் :

787திருத்தொண்டர் திருவந்தாதி

நூல்

தில்லைவாழந்தணர்

1093.செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரி னூரெரித்த
அப்பர்க்(கு) அமுதத் திருநடர்க்(கு) அந்திப் பிறையணிந்த
துப்பர்க்(கு) உரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே

1

திருநீலகண்ட நாயனார்

1094.சொல்லச் சிவன்திரு வாணைதன் தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்னுமை கோனருளால்

திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தோடு ஒத்த அருளாசிரியத் திருமொழியாகக் கொண்டே திருத்தொண்டர் வரலாற்று விரியைத் தாம் அருளிச் செய்தார்' - என்பதை,

அந்த மெய்ப்பதி கத்துஅடி யார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்1

எனக் கூறியவாற்றால் அறிகின்றோம். 'நாதன்' என்பது அருளாசிரியரைக் குறிக்கும் சொல். இதன்கண் சேக்கிழார், "புந்தி ஆரப் புகன்ற வகை" - என்றதன்றி, 'விநாயகர் சொல்லிய வகைப்படி' எனக் கூறாமை நோக்கத் தக்கது.

வகை நூலாகிய இதன் விரியே திருத்தொண்டர் புராணம் ஆகலின், இவ்வந்தாதிப் பாடல்களின் விரி பொருள் அப்புராணத்திலே காணத் தக்கது. இங்கு அவற்றைத் தந்துரைத்தல் மிகையாகும்.

1093. குறிப்புரை: புவனங்கள் மூன்றினும் ஒப்ப உம்பரின் ஊர் - மூவுலகங்களிலும் ஒருபடித்தாக மேலே திரிந்த ஊர்கள்; திரிபுரம். அமுதத் - திருநடம் - அமுதம்போல இறப்பினை நீக்கிப் பேரானந்தத்தைத் தருகின்ற நடனம். நடர் - நடன மாடுபவர். துப்பர் - தூயவர். உரிமைத் தொழில் - அகம்படித் தொண்டு; அணுக்கத் தொண்டு; வழிபாடு. சொல்லுதும் - துதிப்போம்.

1094. குறிப்புரை: 'சிவன் திரு ஆணை சொல்ல' எனக் கூட்டுக. சிவன் ஆணை - சிவன்மேல் ஆணை. 'தூய மொழியினையுடையாள்'


1. பெரிய புராணம் - திருமலைச் சிறப்பு - 39.