பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை788

வில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே.

2

இயற்பகை நாயனார்

1095.செய்தவர் வேண்டிய தியாதுங் கொடுப்பச் சிவன்தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை யீந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட்டினத்துள் இயற்பகையே.

3

இளையான்குடிமாற நாயனார்

1096.இயலா விடைச் சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரிமனையலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை மாறனெங் கற்பகமே.

4

மெய்ப்பொருள் நாயனார்

1097.கற்றநன் மெய்த்தவன் போலொரு பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை யவனைச் செறப்புக லுந்திருவாய்

என்னும் பொருட்டாகிய "தூமொழி" என்பது "துணைவி" என்னும் பொருட்டாய் நின்றது. நசை - விருப்பம். ஒல்லை - விரைவாக; அப்பொழுதே.

1095. குறிப்புரை: செய் தவர் - தவம் செய்பவர்; சிவனடியார்கள் கொடுப்ப - கொடுத்துவரும் நாட்களில் கைதவம் - வஞ்சனை; தூர்த்தர் பேசுவது போலப் பேசியது. "காவிரிபூம்பட்டினம்" என்றதனானே 'வணிகர்' என்பது பெறப்படும் என்பது கருத்து.

1096. குறிப்புரை: இயலா இடை - யாதும் செய்ய இயலாத காலம். அது வறுமை நிலையும் பாதி இரவும், மழைப் பெயலும் ஆகிய காலம். மாதவன் - சிவனடியான். வித்து - விதை. மனை அலக்கு - வீட்டுக் கூரையாயிருந்த கழிகள். செயல் ஆர் பயிர் - வீட்டுப் புழைக்கடையில் அப்பொழுது தான் சிறிதே வளர்ந்த கீரைப்பயிர். விழு - விழுப்பம்; மேன்மை. தீ - இனிமை; இளையான்குடி, ஊர். இஃது எந்த நாட்டில் உள்ளது என்பது துணியப்படவில்லை.

1097. குறிப்புரை: 'தன்னைக் காய் சினத்தால் செற்றவன் நன் மெயத்தவன் போல் ஒரு பொய்த்தவன். அவனை எனக் கூட்டுக.