| மற்றவன் 'தத்தா நமரே' யெனச்சொல்லி வானுலகம் பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாமென்று பேசுவரே. | | 5 |
விறன்மிண்ட நாயனார் 1098. | பேசும் பெருமையவ் வாரூ ரனையும் பிரானவனாம் ஈசன் தனையும் புறகுதட் டென்றவ னீசனுக்கே நேச னெனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல் வீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டேனே. | | 6 |
அமர்நீதி நாயனார் 1099. | மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின் முண்டந் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர் கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமுந் தன்னையுந்தன் துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே. | | 7 |
'போல் பொய்த்தவன்' என்பது, 'போல்கின்ற பொய்த்தவன்' என வினைத்தொகை. இவன் 'முத்த நாதன்' என்னும் பெயரினனாகிய பகையரசன். செற - கொல்ல - புகுந்தவன் 'தத்தன்' என்னும் காவலாளி - என்பது பின்பு, 'தத்தா' என்றதனால் விளங்குகின்றது. 'திருவாயால்' எனவும், 'மற்று அவனை' எனவும் உருபுகள் விரித்து, "சொல்லி" என்பதன்பின் 'தடுத்து' என ஒரு சொல் வருவிக்க. மற்று, வினைமாற்று. சேதிபன் - சேதி நாட்டு அரசன். சேதிநாடு - திருமுனைப்பாடி நாடாகிய மலையமான் நாடு. 1098. குறிப்புரை: ஆரூரன், சுந்தரமூர்த்தி நாயனார். பிரான், திருவாரூர்ச் சிவபெருமான். தட்டு - தடை; தடுக்கப் பட்ட இடம். புறகு தட்டு - புறம்பாகிய தடுக்கப்பட்ட இடம். புறகாகிய இடத்தில் உள்ளவர்களை, "புறகு தட்டு" என்றது உபசாரம். 'புறம்பாகிய இடத்தில் உள்ளவர்களை' என்றது 'எம்மரவன்றி, அயலார்' என்றபடி, 'புறகு தட்டு' என்று சொல்லியே ஈசனுக்கு நேசன் ஆயினான்; எனக்கும் பிரான் (தலைவன்) ஆயினான் என்பதாம். திருச்செங்குன்றம், மலை நாட்டில் உள்ளது. 1099. குறிப்புரை: மிண்டும் - நெருங்கிய. பொழில் - சோலை. பழையாறை ஒரு பெருநகரம். இஃது இடைக் காலத்தில் பல ஆண்டுகள் சோழர்களுக்கு உறைவிடமாய் இருந்தது. வெண்பொடி - திருநீறு. முண்டம் - நெற்றி. தரித்த - தாங்கிய. வெண்பொடியணிந்த முண்டத்தைத் தரித்த பிரான் சிவன். நல்லூர் பழையாறைப்பெரு
|