சுந்தரமூர்த்தி நாயனார் 1100. | தொழுதும் வணங்கியும் மாலயன் தேடருஞ் சோதிசென்றாங் கெழுதுந் தமிழ்ப்பழ வாவணங் காட்டி யெனக்குன்குடி முழுதும் அடிமைவந் தாட்செ யெனப்பெற்ற வன்முரல்தேன் ஒழுகும் மலரின்நற் றாரெம்பி ரான்நம்பி யாரூரனே. | | 8 |
எறிபத்த நாயனார் 1101. | ஊர்மதில் மூன்றட்ட வுத்தமற் கென்(று) ஓருயர்தவத்தோன் தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த ஊர்மலை மேற்கொள்ளும் பாக ருடல்துணி யாக்குமவன் ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே. | | 9 |
நகரின் ஒரு பகுதி. கோவண நேர் கொண்டு - கோவணத்திற்குச் சம எடையாக ஏற்று. இங்கு அருள் - இப்பொழுது அருள் புரிவாயாக. 'மதிநுதலார்' என்பது, 'துணைவி' எனப் பொருள்தந்து நின்றது. 'தொழில்' என்பது, தொண்டினைக் குறித்தது. 1100. குறிப்புரை: திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தின் வகையாகிய இவ்வந்தாதியில் அத்திருப் பதிகத்தின் ஒவ்வொரு பாட்டிலும் சுந்தர மூர்த்தி நாயனார் தம்மைக் குறித்தருளினார் ஆகலின் அவரது வரலாற்றிற்குத் தனி ஒரு பாட்டே அமைத்துப் போகாமல், ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்பட்ட அடியார்களைப் பற்றிக் கூறி முடித்தபின், சுந்தரரைப் பற்றிய பாட்டுக்களை அமைத்தருளினார். பின்பு இதன் விரிபாடிய சேக்கிழார் நாயனார் ஒரு பாட்டில் உள்ள நாயன்மார்களது வரலாறுகளை ஒரு சருக்கமாகத் தொகுத்தருளினார். தொழுதல் - கும்பிடுதல். வணங்கல் - வீழ்ந்து வணங்குதல். 'வணங்கியும் அடைசோதி' என வேறாக்கி முடிக்க. முரலுதற்கு 'வண்டு' என்னும் எழுவாய் வருவிக்க. ஒழுகும் - ஒழுகுதற்கு முதலாகிய. மலர், தாமரை மலர். தார் - மாலை. 1101. குறிப்புரை: ஊர் மதில் - வானத்தில் திரிகின்ற கோட்டைகள். உயர் தவத்தோன், 'சிவகாமியாண்டார்' என்பவர். உத்தமற்கு - என்று மலர் கொய்யா (கொய்து) வருபவன்' என்க. ஊர் - ஊரத்தக்க மலைபோலும் யானை. மலையினதும், பாகரதும் ஆகிய உடல்களைத் துணி ஆக்கும் அவன் என உரைக்க. இவரது மரபு அறியப்படவில்லை.
|