பக்கம் எண் :

79அற்புதத் திருவந்தாதி

144.

உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ(டு) அண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து. 

101

திருச்சிற்றம்பலம்


“கண்ணினின்றும் எழும் தீயால் திசைகள் வேகும்’ என்க. இடிக்கின் - கதறினால். ஏங்கும் - கதி காணாது கலங்கும். இதன்பின், ‘ஆதலால்’ என்பது வருவிக்க. அடுக்கல் - மலை. ‘மலையின்கண் நின்று’ என விரிக்க. பொரும். ஏறோ - இடபந்தானோ. உரும் ஏறோ - மேகத்தினின்றும் தோன்றுகின்ற இடியேறோ, சிவனைச் சார்ந்தமையால், ஆனேறும் பிறவகை ஏறுகளினும் மிகுவலி பெற்றமையைக் கூறியவாறு

144. அ. சொ. பொ.: ‘காரைக்காற் பேய் சொல் இம்மாலை அந்தாதி வெண்பாக்களை உரையினால், கரைவினாற் பரவுவார் ஆராத அன்பினோடு சென்றுஅண்ணலைப் பேராத காதல் பிறந்து ஏத்துவார்’ என இயைத்து முடிக்க. ‘மாலையாய் அமைந்த வெண்பா’ என்க. மாலையாதல் சொற்றொடர்நிலைச் செய்யுள் ஆதல். “உரை” என்றது, ‘மனம், மொழி, மெய்’ என்னும் மூன்றனுள் ‘மொழி’ என்னும் மொழியைக் குறித்தது. கரைவு - அன்பு. பரவுதல், ஏத்துதல் இரண்டும் துதித்தலைக் குறிக்கும் சொற்கள். ஆராத - நிரம்பாத. பேராத - மாறாத. காதல் - பேரன்பு. பிறந்து தோன்றப் பெற்று. “கரைவினால் பரவுவார்” என்றது இவ்வுலகத்திலும், பின் வந்தவை சிவலோகத்திலும் ஆதலின் அவை கூறியது கூறல் அல்லவாதலை அறிக. சென்று - சிவலோகத்தை அடைந்து. இது நூற் பயன் கூறியவாறு. ஈற்றில் “பிறந்து” என்றது முதல் வெண்பாவின் முதற் சீரோடு சென்று மண்டலித்தல் காண்க.

 

அற்புதத் திருவந்தாதி முற்றிற்று.

* * *