முருக நாயனார் 1110. | பதிகந் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர் மதியஞ் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து துதியங் கழல்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டனம்பொன் அதிகம் பெறும்புக லூர்முரு கன்னெனும் அந்தணனே. | | 18 |
உருத்திர பசுபதி நாயனார் 1111. | அந்தாழ் புனல்தன்னி லல்லும் பகலும்நின் றாதரத்தால் உந்தாத அன்பொடு ருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த பைந்தா ருருத்ர பசுபதி தன்னற் பதிவயற்கே நந்தார் திருத்தலை யூரென் றுரைப்பரிந் நானிலத்தே. | | 19 |
திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்) 1112. | நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப் போவா னவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய் மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான் மாவார் பொழில்திக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே. | | 20 |
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் 1113. | மண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவனென்னா |
1110. குறிப்புரை: பதிகம் - திருமுறைத் திருப்பதிகங்கள். பதிகத்தில் திகழ்தரு பஞ்சாக்கரம் என்க. மலர் தொட்டு - பூக்களை மாலையாகத் தொடுத்து. சண்பை நாதன், திருஞான சம்பந்தர். வன்றொண்டன், சுந்தர மூர்த்தி நாயனார், இவர் திருப்புகலூரில் பொன் பெற்ற வரலாற்றைப் பெரிய புராணத்துட் காண்க. 1111. குறிப்புரை: அம் - அழகிய. தாழ்புனல் - ஆழமான நீர். ஆகுரம் - விருப்பம்; உந்தாத - வெளிப்போக்காத. உருத்திரம் - சீருத்திரம். இஃது எசுர் வேதத்தின் ஒரு பகுதியாய் உள்ளது. இன்றும் சிவாலயங்களில் சிறப்பாக ஓதப்பட்டு வருவது. வயற்கு - வயல்களில். நந்து ஆர் - சங்குகள் நிறைந்த. 1112. குறிப்புரை: புறம் - நான்கு வருணங்கட்கும் புறமான சாதி. அதனால் கோயில்களிலும் புறத்தே நிற்பவர். புன்புலை - கீழான புலைச் சாதியில் பிறந்த உடம்பு. "போய்" என்பதை, 'போக' எனத் திரிக்க. பதி - ஊர். 1113. குறிப்புரை: மண்டும் - நிறைந்த. தமர் - அடியார். தூசு - ஆடை. ஏற்றுதல் - அழுக்குப்போகத் துவைத்தல். வாட்டும் வகை -
|