பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை794

முண்டம் படர்பாறை முட்டு மெழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி யேகா லியர்தங்கள் தொல்குலமே.

21

சண்டேசுர நாயனார்

1114.குலமே றியசேய்ஞ லூரிற் குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறற் சண்டிகண் டீர்தந்தை தாளிரண்டும்
வலமே றியமழு வாலெறிந் தீசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே.

22

சுந்தரமூர்த்தி நாயனார்

1115.நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த
மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றிடென்று
துதியா வருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வாயல் நாவலர் கோனென்னும் நற்றவனே.

23

திருநாவுக்கரசு நாயனார்

1116.நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதந்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்

உலர்த்தும்படி. விண்டு - நீங்கி. 'மழை முகில் விண்டு வீடாது எனின்' மாற்றுக. 'விண்டு வீடாது' ஒருபொருட் பன்மொழி. வீவன் - இறுப்பன். முண்டம் - நெற்றி. படர் - அகன்ற. முட்டும் - மோதிய.

1114. குறிப்புரை: குலம் ஏறிய - குலத்தால் உயர்ந்த; 'அந்தணன் ஆகிய' குரிசில் என்க. குரிசில் - தலைவன். விறல் - வெற்றி. இஃது இதனால் உண்டாகிய புகழைக் குறித்தது. கண்டீர், முன்னிலையசை. வலம் - வலக்கை. 'எறிந்தும்' என உம்மை விரித்து, 'எறிந்த பின்னும்' என உரைக்க.

1115. குறிப்புரை: துருத்தி, வேள்விக்குடி. இவையிரண்டும் சோழநாட்டு இரண்டு தலங்கள். இவைகளில் துருத்தி, இப்பொழுது 'குத்தாலம்' என வழங்குகின்றது. இதில் உள்ள சிவபெருமான் பெயரே, 'சொன்னவாறறிவார்' என்பது. வேள்விக்குடியாய் - வேள்விக்குடியில் எழுந்தருளியுள்ளவனே. அறிகுறி வைத்த புகர். அடையாளமாக நீ உண்டாக்கிய உடல்நோய். துதியா - துதித்து. 'அருள் பெற்றவன்' என இயைக்க. காண், முன்னிலையசை. 'வைத்து' என்பது பாடமன்று.

1116. குறிப்புரை: "ஆமூரில் நாவுக்கரசெனும் தூமணி" என்பதை "நற்றவன்" என்பதன் பின்னர்க் கூட்டி, செய்யுள் பற்றி முறை பிறழ வைக்கப்பட்ட நல்லூர்ச் சிவன் திருப்பாதம் தன் சென்னி வைக்கப்