| உற்றவ னுற்ற விடம்அடை யாரிட வொள்ளமுதாத் துற்றவன் ஆமூரில் நாவுக் கரசெனுந் தூமணியே. | | 24 |
1117. | மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால் திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலில் பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே அணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே. | | 25 |
குலச்சிறை நாயனார் 1118. | அருந்தமி ழாகரன் வாதி லமணைக் கழுநுதிமேல் இருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித் தோனெழிற் சங்கம்வைத்த பெருந்தமிழ் மீனவன் தன்னதி காரி பிரசமல்கு குருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே. | | 26 |
பெற்றவன்" என்பது "துற்றவன்" என்பதன் பின்னர் வைத்து உரைக்க. நல்லூர், தலம். உற்ற விடம் - சமணர் கருத்தில் பொருந்திய நஞ்சு. அடையார் - பகைவர்; சமணர். 'நிறைதல்' எனப் பொருள் தரும் 'துறு' என்னும் முதனிலை உண்டலையும் குறிக்குமாதலின், "துற்றவன்" என்பது, 'உண்டவன்' எனப் பொருள்தந்தது. "அமுதா உண்டவன்" என்றதனால் அவ் விடத்தால் தீங்கின்றியிருந்தமை கூறப்பட்டதாம். 1117. குறிப்புரை: "மணி" என்றதும், "மருந்து" என்றதும் திருமறைக்காட்டுப் பெருமானை. திறப்பித்தன - திறக்க வைத்தன. பிணி கல், 'பிணிக்கப்பட்ட கல்' எனச் செயப்படு பொருள்மேல் தொக்க வினைத்தொகை. 'அந்த' என்னும் கூட்டுப் பொருளைத் தரும் 'அன்ன' என்பது இடைக்குறைந்து நின்றது. 'கல்லை' என இரண்டாவது விரிக்க. அணி - அணிகலம். அணியன - அணிபோல்வன. 'பலரது உள்ளங் களையும் கவரச் செய்வன' என்றபடி. நாயனாரை, "நாவுக்கரையர் பிரான்" எனப் போற்றி, வரலாற்றுக்கிடையே அவரது திருப்பதிகங்களை "சைவப் பெருநெறிக்கு அணி" எனவும், 'செயற்கரியவற்றைச் செய்த அருந்தமிழ்' எனவும் எடுத்தோதியருளிய அருமை அறியற்பாலது. 1118. குறிப்புரை: ஆகரம் - இருப்பிடம், தமிழ் ஆகரன் - தமிழுக்கு இருப்பிடமானவர்; திருஞான சம்பந்தர். 'அவர் செய்த வாதில்' என்க. "வாது" என்றது வாதத்தின் முடிவை. அமண் - சமணக் கூட்டம். நுதி - நுனி. இருந்தமிழ் - பெருமை மிக்க தமிழ்; செந்தமிழ் "தமிழ் நாட்டிடை ஏற்றுவித்தோன்" என்றாராயினும்
|