பெருமிழலைக் குறும்ப நாயனார் 1119 | சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக் கிறைநன் கழல்நாளை யெய்து மிவனருள் போற்றவின்றே பிறைநன் முடிய னடியடை வேனென் றுடல்பிரிந்தான் நறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்ப னெனுநம்பியே. | | 27 |
காரைக்கால் அம்மையார் 1120. | நம்பன் திருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டும் உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற வுமைநகலும் செம்பொன் னுருவனெ னம்மை யெனப்பெற் றவள்செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலினின் மேய குலதனமே. | | 28 |
'தமிழ் நாட்டிடையிருந்த அமணை ஏற்று வித்தான்' என்றலே கருத்து என்க. ஏற்றுவித்தது, அரசன் ஆணையை ஏவலரைக் கொண்டு நிறைவேற்றியது. பாண்டியன் இந்நாயனார் காலத்துப் பாண்டியன் நெல்வேலி வென்ற நெடுமாறன். 'கூன் பாண்டியன்' என்றும் சொல்லப்படுவான். முன்னோர் சங்கம் வைத்த செயலை அவர் மரபின் வந்த உரிமை பற்றி இவன்மேல் வைத்துக் கூறினார். "மதுரைத் தொகை ஆக்கினான்"1 என இவ்வாறே ஞானசம்பந்தரும் அருளிச்செய்தார். சங்கம் புதிதாக வையாவிடினும் சங்கத்தைப் புரந்த செயல் இவனுக்கும் உண்டு என்க. "அதிகாரி" என்றது அமைச்சனை. ஒட்டக்கூத்தரது தக்க யாகப்பரணியில் "அதிகாரி" என்னும் சொல் மட்டுமே காணப்படுகின்றது. மணமேற் குடி, ஊர். மன் - தலைவன். இந்நாயனாரது மரபு அறியப்படவில்லை. 1119. குறிப்புரை: நாவலூராளி, சுந்தரமூர்த்தி நாயனார். 'அவர் நாளைக் கயிலை செல்லப் போகிறார்' என்பதை இவர் தம் யோகக் காட்சியால் அறிந்து முன்னாளே யோகத்தால் உடலை விட்டுப் பிரிந்து கயிலை சேர்ந்தார். பெருமிழலை, ஊர். குறும்பர் - சிற்றரசர். 'குறும்பர்' என்பது 'சிற்றரசர்' எனப் பொருள் தரும். எனினும், 'சிற்றரசராய் இருப்போர் தனியொரு மரபினர் அல்லர் என்பதனாற்போலும் இந்நாயனாரும் மரபறியா அடியார்களுள் ஒருவராகச் சொல்லப்பட்டார்.2 1120. குறிப்புரை: "செழுந்தேன்" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. காரைக்கால் ஊர். குல தனம் - பிறந்த
1. திருமுறை - 3 - 5.4.11. 2. சேக்கிழார் புராணம் - 41.
|