பக்கம் எண் :

797திருத்தொண்டர் திருவந்தாதி

அப்பூதியடிகள் நாயனார்

1121.தனமா வதுதிரு நாவுக்கரசின் சரணமென்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள்பிரான்
அனமார் வயல்திங்க ளூரினில் வேதியன் அப்பூதியே.

29

திருநீலநக்க நாயனார்

1122.பூதிப் புயத்தர் புயத்தில் சிலந்தி புகலுமஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை நீப்பவுப் பாலவெல்லாம்
பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்னெனும் வேதியனே.

30

நமிநந்தியடிகள் நாயனார்

1123.வேத மறிக்கரத் தாரூ ரரற்கு விளக்குநெய்யைத்
தீது செறியமண் கையரட் டாவிடத் தெண்புனலால்

குலத்திற்குச் செல்வம் போன்றவள். நம்பன், செம்பொன் உருவன் - சிவபெருமான். உம்பர் - ஆகாயம். மிசை, ஏழன் உருபு. 'மிசையாக' என ஆக்கம் வருவிக்க. தலை கீழாக நடந்து வருவதைப் பார்த்து உமாதேவி சிரித்தாள். அம்மை - தாய். தாய்போல அன்பு செலுத்தி உபசரிப்பவள். உபசரித்தல் சங்கம வடிவில். எனப் பெற்றவள் - என்று சொல்லும் பேற்றினைப் பெற்றவள்.

1121. குறிப்புரை: புனற் பந்தர் - தண்ணீர்ப் பந்தல் "வாழ்த்தி" என்பதை, "என்னா" என்பதன் பின்னர்க் கூட்டுக. இனம் - அடிமையினம். 'திங்களூர்' ஊர்ப்பெயர். தனது பெயர் - திருநாவுக்கரசரது பெயர். இடப் பெற்றவன் - இட்ட பேற்றினைப் பெற்றவன்.

1122. குறிப்புரை: பூதி - விபூதி. பூதிப்புயத்தர், விபூதியை யணிந்த தோள்களையுடையவர் சிவபெருமான் என்றது சிவலிங்கத்தை. புயம் - தோள்; மேல் இடம். 'உடம்பின்மேல் சிலந்தி விழுந்தால், அது விழுந்த இடத்தில் கொப்புளம் உண்டாகிவிடும்' என்பர். அப்படிக் கொப்புளம் உண்டாகா திருக்க உடனே வாய் எச்சிலைத் துமிந்து கையால் தேய்ப்பது வழக்கம். அப்படி மனைவியார் செய்தார். 'அஃது அநுசிதம்' என்று நாயனார் அவரைத் துறந்தார். உப்பால - துமியப்படாத இடங்கள். பேதித்தல் - வேறுபடுதல். "பேதித்து" என்பதை 'பேதிக்க' எனத் திரிக்க. 'கொப்புளம் எழுந்தனவற்றைக் காண்க' என உணரக் காட்டியது கனவில். சாத்தை - சாத்த மங்கலம்; ஊர்.