பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை798

ஏத முறுக வருகரென் றன்று விளக்கெரித்தான்
நாதன் எழிலேமப் பேறூ ரதிபன் நமிநந்தியே.

31

சுந்தரமூர்த்தி நாயனார்

1124.நந்திக்கு நம்பெரு மாற்குநல் லாரூரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலில்
சிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்றொண்ட னென்பரிவ் வையகத்தே.

32

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

1125.வைய மகிழயாம் வாழ வமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச்செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தைய லருள்பெற் றனனென்பர் ஞானசம் பந்தனையே.

33


1126.பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல
சந்தா ரகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து


1123. குறிப்புரை: மறி - மான் கன்று. சிவபெருமானது சாங்க உபாங்கங்களை வேதமாக உபசரித்தல் மரபாதல் பற்றி, "வேத மறி" என்றார். வேதத்தை அரனுக்கு அடையாக்கலும் ஆம். கையர் - வஞ்சகர்; உள்ளதை 'இல்லை' எனக் கரந்தவர். அட்டாலிட - வார்க்காமல் மறுக்க. ஏதம் - குற்றம்; பாவம். நாதன் நமிநந்தி எம் தலைவனாகிய நமிநந்தி. ஏமப்பேறூர், ஊர்.

1124. குறிப்புரை: 'நந்தி' என்பதும் சிவபெருமானுக்கே பெயர். பந்திப்பரியன - செய்யுளாக யாத்தற்கு அரியன. செந்தமிழ், அதனாலகிய பாடல்களுக்கு ஆகுபெயர். படர் புனல், காவிரியாற்றில் ஓடிய வெள்ளம். சேவடி, திருஐயாற்றுப் பெருமானது திருவடிகள். அவற்றைப் பெற்றமையாவது, வெள்ளம் இருபாலும் ஒதுங்கி வழிவிடப் பெற்றமை. 'சேவடி பெற்று, அவன் சேவடியே வந்திப்பவன்' என்க.

1125. குறிப்புரை: யாம் - சைவர்கள். பிரமபுரம் - சீகாழி. 'அரற்குப் பாட என இயையும். பாட - பாடும் படி. 'அம் வாய், குதலை வாய், செவ்வாய்' எனத் தனித்தனி இயைக்க. அம் - அழகு. பருவம், குழவிப் பருவம். "குழவிப் பருவத்தில் தையல் அருள் பெற்றனன்" என்றதனால், 'திருமுலைப் பால் அருளப் பெற்றான்' என்றதாயிற்று.

1126. குறிப்புரை: பந்தார் விரலியர் - மகளிர். அவர்கட்கு வேள் (மன்மதன்) போன்றவன் கோச்செங்கட் சோழன், முருகன் - முருக