| கொந்தார் சடையர் பதிகத்தி லிட்டடி யேன்கொடுத்த அந்தாதி கொண்ட பிரானருட் காழியர் கொற்றவனே. | | 34 |
ஏயர்கோன் கலிக்காம நாயனார் 1127. | கொற்றத் திறலெந்தை தந்தைதன் தந்தையெம் கூட்டமெல்லாம் தெற்றச் சடையாய் நினதடி யேம்திகழ் வன்றொண்டனே மற்றிப் பிணிதவிர்ப் பானென் றுடைவாள் உருவி யந்நோய் செற்றுத் தவிர்கலிக் காமன் குடியேயர் சீர்க்குடியே. | | 35 |
திருமூல நாயனார் 1128. | குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின் | | |
நாயனார். நீல நக்கன் - திருநீல நக்க நாயனார். இவர்கள் பெயர்களை ஞானசம்பந்தர். தமது பதிகத்தில் இட்டுப் பாடியன முறையே, "மழையார் மிடறா" எனத் தொடங்கும் திருவானைக்காப் பதிகத்திலும், "பட்டம் பால் நிற மதியம்" எனத் தொடங்கும் திருப்புகலூர் வர்த்தமானீச்சரப் பதிகத்திலும், "திருமலர்க் கொன்றை மாலை" எனத் தொடங்கும் திருச்சாத்தமங்கை பதிகத்திலும் ஆகும். இவர்களோடு சிறுத்தொண்ட நாயனாரது பெயரை இட்டுப் பாடிய திருப்பதிகம், "நறைகொண்ட மலர்தூவி" எனவும், "பைங்கோட்டு மலர்ப்புன்னை" எனவும் தொடங்கும் திருச்செங்காட்டங்குடித் திருப்பதிகங்களாகும். இவைகளில் பின்னர்க்கூறிய பதிகத்தின் எல்லாப் பாடல்களிலும் சிறுத்தொண்டர் பெயர் இடப்பட்டுள்ளது. இதனை இவர் பின்வரும் திருவந்தாதி 72-ஆம் பாட்டில் குறிப்பால் உணர்த்தினார். "அடியேன் தொடுத்த அந்தாதி கொண்டவன்" என்றதனால், 'அவ்வந்தாதிக்குப் பின்பே இவ்வந்தாதி பாடப்பட்டது' எனக் கருதலாம். 1127. குறிப்புரை: தெற்றம் - தெற்றுதல்; பின்னுதல். கூட்டம் - கூட்டத்தினர்; ஆகுபெயர். "நினது அடியேம்" என உயர்திணைக்கண் அது உருபு வந்தது பிற்கால வழக்கு. வன்றொண்டன் - வன்மை பேசி எதிர்வழக்கிட்டு ஆட்பட்டவன். ஏகாரம், வினா. மற்று, அசை. அந்நோய், சூலை நோய். 1128. குறிப்புரை: சாத்தனூர், திருவாவடுதுறை அருகில் உள்ள ஓர் ஊர். கோக்குலம் - பசுக்கூட்டம். குரம்பை - உடம்பு. படி - அமைப்பு வகை. "படி" இரண்டில் முன்னதில் 'படியால்' என உருபு விரிக்க. பரவுதல் - துதித்தல். "பரவிட்டு" என்பதில், 'இட்டு' என்பது
|