பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை800

படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல னாகின்ற வங்கணனே.

36

தண்டியடிகள் நாயனார்

1129. கண்ணார் மணியொன்று மின்றிக் கயிறுபிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலுந் தன்னை நகுமமணர்
கண்ணாங் கிழப்ப வமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவ னாரூர் விறல்தண்டியே.

37

மூர்க்க நாயனார்

1130. தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன்தகுகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநல் நீற்ற னடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே.

38

சோமாசிமாற நாயனார்

1131. சூதப்பொழி லம்ப ரந்தணன் சோமாசி மாறனென்பான்
வேதப் பொருளஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் றொண்டன் தனக்கு மகிழ்துணையே.

39


அசை. அம்கணன் - அழகிய கண்களை யுடையவன். கண்ணுக்கு அழகு கருணை.

1129. குறிப்புரை: "ஒன்றும்" என்னும் உம்மை இழிவு சிறப்பு. 'தொடலும்' என்பது விரித்தல் பெற்றது. தொடுதல் - தோண்டுதல். இந்நாயனாரது மரபும் அறியப்படவில்லை.

1130. குறிப்புரை: திருவேற்காடு, தொண்டைநாட்டுத் தலம். கவறு - சூதாடு கருவி. வல் ஆயம் - வலிய தொகை; பந்தயக் zகணக்கு. நண்டு அலை நீர் - நண்டுகள் உலாவுகின்ற நீர். குடத்தை, இப்பொழுது 'கும்பகோணம்' என வழங்குகின்றது. இந்நாயனார் இறுதியில் அங்குச் சென்று தங்கினார்.

1131. குறிப்புரை: சூதம் - மாமரம். அம்பர், அம்பர் மாகாளம்; சோழநாட்டுத் தலம். 'மாறன்' என்பது இயற்பெயர். 'சோமாசி' என்பது சிறப்புப் பெயர். 'சோம யாஜி' என்பது 'சோமாசி' எனத்